மறைமலைநகர் அருகே 36 அடி உயரத்தில் ஐயப்பன் சிலை பிரதிஷ்டை! திரளான பக்தர்கள் பங்கேற்பு!

By SG BalanFirst Published Jan 18, 2024, 12:01 AM IST
Highlights

செங்கல்பட்டு மாவட்டத்தில் மறைமலைநகர் அருகே ஐயப்பன் கோவிலில் புதிதாக 36 அடி உயர அய்யப்பன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே பாவேந்தர் சாலையில் 29 ஆண்டுகளாக அமைந்துள்ள ஐயப்பன் கோவிலில் தற்போது 36 அடி உயரத்தில் ஐயப்பன் சிலை புதியதாக கட்டி இன்று சிறப்பு யாகசாலை பூஜை நடத்தி பிரதிஷ்டம் செய்தனர்

பக்த ஜனா டிரஸ்ட் சார்பில் ஐயப்பன் சிலைக்கு யாகசாலை பூஜை, வேள்வி பூஜை, பெத்திருக்கல் பித்ருகல் பூஜை மகாவிஷ்ணு பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தியும் கலச நீரில் ஐயப்பன் மேல் ஊற்றி பிரதிஷ்டை செய்தனர்.

Latest Videos

மேலும் சுமார் 108 பால்குடமும் 108 பன்னீர் குடத்திலும் பக்தர்கள் ஐயப்பன் மேல் பால் மற்றும் பன்னீரை ஊற்றி அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

இந்த விழாவில் மறைமலைநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 500இக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா: பிரதமர் மோடியின் பயணத் திட்டத்தில் மாற்றம்!

click me!