மெரினா மற்றும் பெசன்ட்நகர் கடற்கரை சாலையில் இன்று இரவு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மெரினா மற்றும் பெசன்ட்நகர் கடற்கரை சாலையில் இன்று இரவு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. புத்தாண்டை முன்னிட்டு போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து சென்னை காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடற்கரை உட்புற சாலை 31ம் தேதி (இன்று) இரவு 7 மணி முதல் 1 ஆம் தேதி (நாளை) காலை 6 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும். கடற்கரை உட்புற சாலையில் இந்த நேரத்தில் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படாது. அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பு வழியாக மட்டுமே வெளியேற அனுமதிக்கப்படும். காமராஜர் சாலை போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை 31-ந்தேதி இரவு 8 மணி முதல் 1-ந்தேதி காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்துக்காக மூடப்படும். அடையாறு பகுதியில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் காரணீஸ்வரர் பகோடா தெருவில் அம்பேத்கர் பாலம் வழியாக நடேசன் சாலை, ஆர்.கே.சாலை வழியாக சென்று அவர்களின் இலக்கை அடையலாம்.
இதையும் படிங்க: மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் கண்காட்சி… தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!
டாக்டர் ஆர்.கே.சாலையில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் வி.எம். தெரு சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு ஆர்.கே.மடம் சாலை, லஸ் சந்திப்பு, மந்தைவெளி, தெற்கு கால்வாய் கரை சாலை வழியாக சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும் கிரீன்வேஸ் சாலையை சென்றடையலாம். பாரிமுனை சந்திப்பிலிருந்து காமராஜர் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் (வடக்கு) வடக்கு கோட்டை சுவர் சாலை, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், வாலாஜா பாய்ண்ட், அண்ணாசாலை வழியாக சென்று அவர்களின் இலக்கை அடையலாம். வாலாஜா பாயிண்ட், சுவாமி சிவானந்தா சாலை, (தூர்தர்ஷன் கேந்திரா அருகில்) வாலாஜா சாலை (விக்டோரியா விடுதி சாலை அருகில், பாரதி சாலை, விக்டோரியா விடுதி சாலை, டாக்டர் பெசன்ட் சாலை (எம்ஆர்டிஎஸ் அருகில்), லாயிட்ஸ் சாலை - நடேசன் சாலை மற்றும் நடேசன் சாலை - டாக்டர் ஆர்.கே.சாலை சந்திப்பில் இருந்து காந்தி சிலை வரையில் போக்குவரத்து அனுமதி இல்லை. தெற்கு கால்வாய் கரை சாலையிலிருந்து கலங்கரை விளக்கம் சந்திப்பு வரையிலான முழு வளைய சாலையில் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படமாட்டாது. ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் இருந்து (வடக்கு) ராஜாஜி சாலை மற்றும் வாலாஜா முனையிலிருந்து போர் நினைவிடம் நோக்கி கொடி மரச் சாலையில் இரவு 8 மணி முதல் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படாது.
இதையும் படிங்க: குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம்... குற்றவாளிகளை கண்டுப்பிடிக்க குழு அமைப்பு!!
அடையாரில் இருந்து பாரிமுனை நோக்கி செல்லும் மாநகர பஸ்கள் அனைத்தும் தெற்கு கால்வாய் சாலை வழியாக திருப்பி விடப்பட்டு மந்தைவெளி, வி.கே.ஐயர் சாலை, புனித மேரி சாலை, லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை, கதீட்ரல் ரோடு அண்ணாசலை வழியாக உங்கள் இலக்கை சென்றடையலாம். பாரிமுனையில் இருந்து அடையார், திருவான்மியூர் தெற்கு நோக்கி செல்லக்கூடிய அனைத்து மாநகர பஸ்களும் ஆர்.பி.சுரங்கப்பாதை வடபகுதிக்கு திருப்பிவிடப்பட்டு என்.எப்.எஸ் ரோடு, முத்துச்சாமி சாலை, அண்ணாசாலை, ஜெமினி மேம்பாலம், கதீட்ரல் ரோடு, வி.எம். சாலை, லஸ் சந்திப்பு மந்தைவெளி வழியாக தெற்கு கால்வாய் சாலையை சென்றடைந்து உங்கள் இலக்கை சென்றடையலாம். அனைத்து மேம்பாலங்களும் 31 ஆம் தேதி (இன்று) இரவு 10 மணி முதல் 1 ஆம் தேதி (நாளை) காலை 6 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும். எலியட்ஸ் கடற்கரை பகுதியில் 31 ஆம் தேதி (இன்று) இரவு 8 மணிக்கு பின்னர் 6 ஆவது அவென்யூ நோக்கி 1 ஆம் தேதி (நாளை) காலை 6 மணி வரை வாகனங்கள் அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.