Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த ஏரியாக்களில் மின்தடை தெரியுமா?

Published : Dec 30, 2022, 07:45 AM IST
Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த ஏரியாக்களில் மின்தடை தெரியுமா?

சுருக்கம்

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். 

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கட்டளை, பெரம்பூர் உள்ளிட்ட  இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

தாம்பரம்:

மடிப்பாக்கம்

கீழ்கட்டளை:

திருவள்ளுவர் நகர், சௌந்தரராஜன் நகர், பெரிய தெரு, அம்பாள் நகர், பாலாஜி நகர் மற்றும் பாலமுருகன் நகர் உள்ளிட்ட பகுதிகள்அடங்கும்.

பெரம்பூர்:

கீழ்ப்பாக்கம், முத்தம்மன் கோயில் தெரு, செட்டி தெரு மற்றும் சோலையம்மன் கோயில் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Chennai Power Cut: எந்த வேலை இருந்தாலும் 9 மணிக்குள்ளே முடிச்சுடுங்க! சென்னையில் முக்கிய இடங்களில் இன்று 5 மணிநேரம் மின்தடை!
Chennai Metro: மெட்ரோ பயணிகளே உஷார்! இனி உரக்கப் பேசினாலும்.. செல்போனில் பாட்டு கேட்டால் ரூ.2,500 அபராதம்..!