புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு விதிமுறை… பொதுமக்கள் கடைப்பிடிக்க சங்கர் ஜீவால் அறிவுறுத்தல்!!

By Narendran SFirst Published Dec 29, 2022, 8:13 PM IST
Highlights

புத்தாண்டை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை விதித்துள்ள விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜீவால் உத்தரவிட்டுள்ளார். 

புத்தாண்டை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை விதித்துள்ள விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜீவால் உத்தரவிட்டுள்ளார். சென்னை வேப்பேரி பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜீவால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வருகின்ற 31 ஆம் தேதி 2023 புத்தாண்டு கொண்டாட்டத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து காவல்துறை ஏற்பாடுகள் செய்துள்ளன. அதில் மொத்தம் 16 ஆயிரத்து போலீசார் 1500 ஊர் காவல் படையினர் பணியில் ஈடுபடுவார்கள். மெரினா கடற்கரையில் கூடுதலாக கடற்கரை பாதுகாப்பிற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். இந்த ஆண்டு மரணம் இல்ல புத்தாண்டாக அனுசரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். அசம்பாவிதம் நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். முக்கிய சாலையான காமராஜ் சாலை வாலாஜா சாலை உள்ளிட்ட சாலைகளில் வாகனங்கள் பார்க்க செய்ய அனுமதி இல்லை. இன்னும் அநேக இடங்களில் எங்கெங்கு வாகனங்களை செய்யலாம் என்பதை குறித்து தெரிவிக்கப்படும்.

இதையும் படிங்க: திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த ஒலிம்பிக் அகாடமி - முதல்வர் அறிவிப்பு

நடமாடும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் அமைக்கப்படும். பைக் ரேசிங் கட்டுப்பாடுகள் அதிகமாக கண்காணிக்கப்படும் இதுவரை 360 வண்டிகளை பறிமுதல் முதல் செய்துள்ளோம். ஹோட்டல் விடுதியில் நடத்தப்படும் கொண்டாட்டத்தில் அவர்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மாலை ஆறு மணி முதல் இரவு ஒரு மணி வரை அனுமதி அளித்துள்ளோம். எவ்விதமான போதைப்பொருட்கள் வைத்திருந்தால் அவர்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு துறை சார்பாக தீயணைப்பு வாகனங்களை தயார் நிலையில் வைத்துள்ளோம். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவர்களை ஏற்படுத்தும் விதமாக தனியார் ஹோட்டல் விடுதிகளில் குடித்து விட்டு வாகனங்களை ஓட்ட வேண்டாம் என்று அறிவுறுத்துமாறு அவர்களிடம் கூறியுள்ளோம். குறிப்பாக பெண்களுக்கு அதிக பாதுகாப்பு அளிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம். கியூ ஆர் கோட் எனப்படும் புதிய செய்முறையை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளோம். போதையில் இருக்கும் நபர்கள் அவர்கள் இடத்திற்கு போவதற்காக இதை பயன்படுத்திக் கொள்ளலாம். இன்று இரவு முழுவதும் அனைத்து வாகன சோதனைகள் செய்யும் இடத்தில் அனைவருக்கும் இந்த க்யூ ஆர் பிரதியை கொடுக்கப்படும்.

இதையும் படிங்க: திருச்சியில் ரூ.625.76 கோடி திட்ட பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்

மேலும் அனைத்து தனியார் ஹோட்டல் விடுதிகளிலும் ஓட்டப்படும். விழிப்புணர்வுக்காக அனைத்து சமூக வலைத்தளங்களில் மற்றும் வானொலி ஆகியவற்றில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளோம். கடற்கரையில் கூட்டம் போடுவதற்கு தடை இல்லை ஆனால் கோவிட் கடைபிடித்த கட்டுப்பாட்டுகளை கடைபிடிக்க வேண்டும். சென்னையில் உள்ள அனைத்து பாலங்களும் மூடப்படும், 300க்கும் மேற்பட்ட தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்படும். ஜீரோ ஃபெடாலிட்டி நைட் என்பதுதான் எங்களின் நோக்கம், நல்ல விஷயத்தில் உயிர் இழப்புகள் ஏற்படக்கூடாது. 18 வயதிற்கு உட்பட்டோர் இந்த விதிமீறல்களில் ஏற்பட்டால் பெட்ரோல் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டு விட சாலை விபத்துக்கள் குறைந்துள்ளது,மேலும் பழிவாங்கும் ரவுடிகள்  செயல்பாடுகள் மற்றும் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது. சம்பவம் நடந்த அடுத்து இரண்டு புள்ளி 42 நிமிடங்களில் காவல் துறை சம்பவ இடத்திற்கு வரும். குடித்துவிட்டு வாகனம் ஓட்டி வரும் வாகன ஓட்டியிடம் போலீசார் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

click me!