ஷாக்கிங் நியூஸ்.. புத்தாண்டு கொண்டாட்டம்.. கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை..!

By vinoth kumar  |  First Published Dec 30, 2022, 7:22 AM IST

சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா மீண்டும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. குறிப்பாக சீனாவில் பி.எப்.7 என்ற புதிய வகை கொரோனா காரணமாக தினமும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 


புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி  சென்னையில் டிசம்பர் 31ம் தேதி இரவு 8 மணிக்கு மேல் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதி இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா மீண்டும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. குறிப்பாக சீனாவில் பி.எப்.7 என்ற புதிய வகை கொரோனா காரணமாக தினமும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், சென்னை கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- பொங்கல் சிறப்பு ரயில்; 10 நிமிடத்தில் விற்பனையான டிக்கெட்கள், முன்பதிவு செய்ய மேலும் ஒரு வழி

undefined

இதுதொடர்பாக சென்னை காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- 2023ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பை கருதி டிசம்பர் 31ம் தேதி இரவு 8 மணிக்கு மேல் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர், எலியட்ஸ், நீலாங்கரை, பாலவாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய அனைத்து கடற்கரை மணற்பகுதி, கடற்கரை ஓரங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

எனவே பொதுமக்கள் டிசம்பர் 31ம் தேதி இரவு 8 மணிக்கு மேல் கடற்கரை மணற்பகுதிக்கு வரவேண்டாம். பொதுமக்களின் பாதுகாப்பை கருதி மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு சென்னை பெருநகர காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை... காவல்துறை அதிரடி உத்தரவு!!

click me!