மாஞ்சா நூல் மூலம் பட்டம் விட்டால் குண்டர் சட்டத்தில் கைது... சென்னை காவல் ஆணையர் பகிரங்க எச்சரிக்கை..!

By vinoth kumarFirst Published May 28, 2020, 4:04 PM IST
Highlights

சென்னையில் மாஞ்சா நூல் மூலம் பட்டம் விடுபவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சென்னையில் மாஞ்சா நூல் மூலம் பட்டம் விடுபவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தமிழகத்தில் மாஞ்சா நூல் பட்டம் விடுவதற்கு அரசு ஏற்கெனவே தடை விதித்திருக்கிறது. ஆனால், அதனையும் மீறி சிலர் பட்டம் விடுவதால் சில நேரங்களில் பட்டத்தின் கயிறு சாலைகளில் செல்வோரின் கழுத்தை அறுத்து உயிரிழப்பும் ஏற்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில், ஊரடங்கு காலம் என்பதால் மாஞ்சா நூல் பட்டம் விடுவது கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- சென்னையில் மாஞ்சா நூல் மூலம் பட்டம் விடுபவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் என எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் இதுவரை மாஞ்சா நூல் மூலம்  பட்டம் விட்ட 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்  தகவல் தெரிவித்துள்ளார்.

click me!