தமிழகத்தில் பலத்த மழை! எச்சரிக்கையோடு வானிலை ஆய்வு மையம் விடுத்த தகவல்!

Published : May 28, 2020, 03:08 PM IST
தமிழகத்தில் பலத்த மழை! எச்சரிக்கையோடு வானிலை ஆய்வு  மையம் விடுத்த தகவல்!

சுருக்கம்

அந்த வகையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வளிமண்டல அடுக்கில் ஏற்பட்ட வெப்ப சலனம் காரணமாக  மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் பல்வேறு பகுதியில், வெய்யிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே சென்றதால், மக்கள் பலர் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் செல்ல முடியாமல் அனல் காற்றால் அவதி பட்டு வந்தனர். 

இந்நிலையில் தமிழகத்தில் இன்றுடன் கத்திரி வெயில் நிறைவடைய உள்ளதால். பல பகுதிகளில் வெப்பம் தணிந்து மழை பொழியும் என எதிர்பார்த்து கார்த்திருக்கின்றனர் மக்கள். 

அந்த வகையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வளிமண்டல அடுக்கில் ஏற்பட்ட வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்றும்  மதுரை, திருச்சி, கரூர், தர்மபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்து உள்ளது.  பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால், மீனவர்கள் யாரும் அடுத்த 4  நாட்களுக்கு மீன்பிடிக்க அரபிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
 

PREV
click me!

Recommended Stories

சென்னையில் அதிர்ச்சி.. காதல் திருமணம் செய்த 9 நாட்களில் மனைவி கொ*லை.. கணவர் விபரீத முடிவு.. நடந்தது என்ன?
காரை முற்றுகையிட்ட அஜிதா... நிற்காமல் சென்ற விஜய் - பனையூர் தவெக அலுவலகத்தில் பரபரப்பு