நாளிதழ், பால் விநியோகம் செய்யும் நபர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்? சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்..!

By vinoth kumarFirst Published May 5, 2021, 1:11 PM IST
Highlights

நாளிதழ் மற்றும் பால் விநியோகம் செய்யும்  நபர்களுக்கு தடுப்பூசியை கட்டாயமாக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நாளிதழ் மற்றும் பால் விநியோகம் செய்யும்  நபர்களுக்கு தடுப்பூசியை கட்டாயமாக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சென்னை மாநகராட்சி சார்பாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும்  சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி ஆகியோருடன் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் முக்கிய ஆலோசனை நடத்தினார். 

தற்போது வரை சென்னையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் காவல்துறை சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் நிர்வாக ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் உயர் அதிகாரியுடன் கேட்டு தெரிந்து கொண்டார்.

மேலும் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நாளை வரக்கூடிய புதிய கட்டுப்பாடுகள் குறித்தும் இந்த ஆலோசனையில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக  காசிமேடு மற்றும் கோயம்பேடு  வளாகங்களை தீவிரமாக கண்காணிக்க  முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாளிதழ் மற்றும் பால் விநியோகம் செய்யும்  நபர்களுக்கு தடுப்பூசியை கட்டாயமாக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

click me!