சென்னை விமான நிலையத்தில் இறந்து கிடந்த மர்ம நபர்..பதறிய போலீஸ்.! பரபரப்பு சம்பவம்

By Raghupati R  |  First Published May 30, 2022, 4:14 PM IST

Chennai : சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் விமான நிலைய அத்தாரிட்டி கேண்டியன் உள்ளது. அதன் அருகே நேற்று இரவு, சுமார் 40 வயதுடைய ஆண் ஒருவர், மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். 


இதையடுத்து அங்கு பணியிலிருந்த விமான நிலைய ஊழியர்கள், சென்னை விமான நிலைய போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சென்னை விமான நிலைய போலிஸார் விரைந்து வந்து உடலை ஆய்வு செய்தனா். உடலில் வெளியே காயங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Tap to resize

Latest Videos

மேலும் இறந்து கிடந்த நபர் யார்? எப்படி இறந்தார்? என்று வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்த நபர் ரமேஷ் என்றும், கடந்த சில ஆண்டுகளாகவே, சென்னை விமான நிலையத்தில் பிரி பெய்ட் டாக்ஸிகளை சுத்தம் செய்வது, டிராலிகளை தள்ளுவது போன்ற வேலைகளை செய்து வந்துள்ளார். மேலும் இவா் குடிபோதைக்கு அடிமையானவா் என்று தெரியவந்துள்ளது.

எனவே இவா் அளவுக்கதிகமான மது போதையில் உயிரிழந்தாரா?இல்லையேல் வேறு காரணம் எதாவது உண்டா? என்று போலிஸார் விசாரிக்கின்றனர். பிரேத பரிசோதனையின் முடிவில் தான் தெரியும் என்று கூறப்படுகிறது. சென்னை விமான நிலையத்திற்குள் மர்மமான முறையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

undefined

இதையும் படிங்க :

இதையும் படிங்க : கணவன் கண்முன்னே கள்ளகாதலனுடன் மனைவி உல்லாசம்.. வாழைத்தோப்பில் கொன்று புதைத்த சம்பவம் !

click me!