கட்டிய தாலியின் ஈரம் காய்வதற்குள் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை.. நெஞ்சில் அடித்து கதறிய மனைவி.!

Published : May 30, 2022, 02:09 PM IST
கட்டிய தாலியின் ஈரம் காய்வதற்குள் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை.. நெஞ்சில் அடித்து கதறிய மனைவி.!

சுருக்கம்

சென்னை ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணாபுரம் 3வது தெருவைச் சேர்ந்தவர் விஜயன் (29) கால் டாக்ஸி ஓட்டுநர்.  இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். இவருக்கு கடந்த 25 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், புது மாப்பிள்ளையான விஜயன் தன்னுடைய கூட பிறந்த அக்கா வீட்டுக்கு விருந்துக்காக சென்று வந்துள்ளார். 

சென்னையில் திருமணமான 25 நாட்களில் புது மாப்பிள்ளை துக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணாபுரம் 3வது தெருவைச் சேர்ந்தவர் விஜயன் (29) கால் டாக்ஸி ஓட்டுநர்.  இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். இவருக்கு கடந்த 25 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், புது மாப்பிள்ளையான விஜயன் தன்னுடைய கூட பிறந்த அக்கா வீட்டுக்கு விருந்துக்காக சென்று வந்துள்ளார். 

அப்போதும் குடிபோதையில் தள்ளாடியுள்ளார். திருமணம் ஆகியும் குடிப்பழகத்தை விடவில்லை என்று விஜயனின் அக்கா கடுமையாக கண்டித்துள்ளார். இதனால், கோபமடைந்த விஜயன் அவரது மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் படுக்கை அறைக்கு சென்று கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டார். நீண்ட நேரமாகியும் கதவை தட்டியும்  விஜயன் வெளியே வராததால் சந்தேகமடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். 

 அப்போது, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. உடனே இதுகுறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விஜயன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 25 தினங்களில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!