அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல்... அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்..!

By vinoth kumarFirst Published Jul 17, 2019, 12:33 PM IST
Highlights

உள்ளாட்சி தேர்தல் நடத்த அக்டோபர் 31-ம் தேதி வரை கால அவகாசம் கோரிய தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

உள்ளாட்சி தேர்தல் நடத்த அக்டோபர் 31-ம் தேதி வரை கால அவகாசம் கோரிய தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று திமுக, மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உள்ளிட்ட பலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது உள்ளாட்சித் தேர்தலை ஏன் நடத்தவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மாநில தேர்தல் ஆணையம் மக்கள் தொகை கணக்கெடுப்புபடி தொகுதி மறுவரை மற்றும் மழை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்ததால் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை என தெரிவித்தது. 

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது உள்ளாட்சித் தேர்தலை நடத்த அக்டோபர் 31-ம் தேதி வரை அவகாசம் வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

இந்நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபர் இறுதியில் வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் உறுதியளித்ததையடுத்து இந்த வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது. 

click me!