99 தேர்வாளர்களுக்கு வாழ்நாள் தடை..! டி.என்.பி.எஸ்.சி அதிரடி..!

Published : Jan 24, 2020, 10:18 AM ISTUpdated : Jan 24, 2020, 10:50 AM IST
99 தேர்வாளர்களுக்கு வாழ்நாள் தடை..! டி.என்.பி.எஸ்.சி அதிரடி..!

சுருக்கம்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் வெளியான குரூப் 4 தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்தன. ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களில் சிலர் இடைத்தரகர்கள் உதவியுடன் மறையக்கூடிய மையினால் தேர்வு எழுதியது விசாரணையில் தெரிய வந்தது. முறைகேட்டில் ஈடுபட்ட 39 பேர் முதல் 100 இடங்களுக்குள் வந்துள்ளனர்.

இதையடுத்து அவர்கள் அனைவரையும் தகுதி நீக்கம் செய்ததோடு வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதித்து தேர்வாணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே தேர்வான 39 பேர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து புதியதாக 39 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Also Read: ஓ.பி.எஸ் மகன் கார் மீது சரமாரி தாக்குதல்..! தேனியில் பரபரப்பு..!

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!