ஆவடி மாணவிகள் பெங்களூருவிற்கு ஓட்டம்..! பத்திரமாக மீட்ட தமிழக போலீஸ்..!

By Manikandan S R SFirst Published Jan 22, 2020, 3:52 PM IST
Highlights

ஆவடியில் காணாமல் போன 4 மாணவிகளும் பெங்களுருவில் மீட்கப்பட்டுள்ளனர்.

சென்னை ஆவடியில் இருக்கிறது காமராஜ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இங்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளனமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 4 பேர் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளனர். அதன்பிறகு இரவு வெகு நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் மாணவிகளை எங்கும் காணவில்லை.

இதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர் சார்பாக ஆவடி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். சென்னை மாநகர காவல்துறையில் இருந்து அனைத்து காவல்நிலையங்களுக்கும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. ரயில்நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உட்பட நகரின் முக்கிய இடங்கள் அனைத்திலும் மாணவிகள் தீவிரமாக தேடப்பட்டு வந்தனர்.

இந்தநிலையில் காணாமல் போன மாணவிகள் அனைவரும் பெங்களுருவில் இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்தனர். பெங்களூரு ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த நான்கு மாணவிகளும் அங்கிருக்கும் போலீசாரின் கட்டுப்பாட்டில் இருந்தனர். மாணவிகளின் பெற்றோருடன் சென்ற தமிழக போலீசார், அவர்களை மீட்டு சென்னை அழைத்து வந்தனர். மாணவிகளிடம் காவல்துறைனையினர் எதற்காக பெங்களூரு சென்றார்கள்? என விசாரணை நடத்தினர்.

அதற்கு செல்போனை அதிக நேரம் பயன்படுத்தி கொண்டிருந்ததால் பெற்றோரும் ஆசிரியரும் கண்டித்ததாகவும் அதன் காரணமாக பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் 4 பேரும் பெங்களூரு சென்றதாக கூறியிருக்கின்றனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Also Read: ஜோதிடர் மனைவியுடன் ஆசை தீர உல்லாசம்..! ஆத்திரத்தில் தொழிலதிபரை அறுத்துக்கொன்ற கும்பல்..!

click me!