"சொத்துக்காக நான் தான் என் தங்கச்சிய கொன்னேன்" !! - சகோதரி பகீர் வாக்குமூலம்..

Published : Aug 14, 2019, 03:14 PM ISTUpdated : Aug 14, 2019, 03:45 PM IST
"சொத்துக்காக நான் தான் என் தங்கச்சிய கொன்னேன்" !! - சகோதரி பகீர் வாக்குமூலம்..

சுருக்கம்

சென்னையில் தந்தையின் சொத்துக்களை அடைவதற்காக உடன்பிறந்த தங்கையையே அக்காள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் ஜெயா . சென்னை மாநகராட்சியில் சாலைப் பணியாளராக வேலை செய்து  வருகிறார் . இவரது கணவர் சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார் . ஜெயாவின் சகோதரி தேவி கடந்த சில நாட்களுக்கு முன் ஜெயாவின் வீட்டில் வந்து தங்கியுள்ளார் .

இந்த நிலையில் தான் கடந்த 12 ம் தேதி ஜெயா நெஞ்சு வலியால் இறந்துவிட்டதாக தேவி அதிகாலை நேரத்தில் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை எழுப்பி அழுதுபுலம்பியுள்ளார் . ஆனால் ஜெயாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரின் உறவினர் ராஜா என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் . 

காவல்துறையினர் வந்து ஜெயாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் . பரிசோதனையின் முடிவில் ஜெயா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது .இதையடுத்து தேவியை பிடித்து விசாரணை செய்ததில் அவர் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்தார் . இதனால் மீண்டும் தேவியிடம் விசாரணை செய்தனர் . 

போலீசாரின் கேள்விகளுக்கு திணறிய தேவி ஒரு கட்டத்தில் உண்மையை ஒப்புக்கொண்டார் . இரண்டு கூலிப்படை நபர்களை வைத்து அதிகாலையில் ஜெயாவை தான் கழுத்தை நெரித்து கொன்றதாக தெரிவித்தார் . தனது தந்தையின் அரசு வேலையை ஜெயா வாங்கி கொண்டார் , சொத்துக்களுக்கும் உரிமம் கொண்டாட வருவார் என நினைத்து கொலை செய்ததாக தேவி கூறினார் . 

இதையடுத்து அவரை  கைது  செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்த சம்பவங்கள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தததாகவும் , அது கொலையாளியை கண்டு பிடிக்க பெரிதும் உதவியதாக போலீசார் தெரிவித்தனர் ..

PREV
click me!

Recommended Stories

ரூ.18,500 முதல் 58,600 வரை சம்பளம்.. விண்ணப்பிப்பது எப்படி? சென்னை தியாகராஜர் கோவிலில் வேலை!
தங்கத்துடன் போட்டி போடும் வெள்ளி.! இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா? இதோ லேட்டஸ்ட் அப்டேட்!