பெருந்தொற்று காலத்திலும் பொதுமக்கள் மீது அக்கறை கொள்ளும் குமுதம் வார இதழ்.. முகக்கவசம், கையுறை வழங்கி அசத்தல்

By vinoth kumarFirst Published Jun 7, 2020, 6:29 PM IST
Highlights

தமிழக மக்களது சமூக அறிவுத் தரத்தை குமுதம் பத்திரிகை நிர்ணயிக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. தற்போது ஊரடங்கிலும் வாசகர்களின் ஆரோக்கியம் தான் முக்கியம் என்று கருதி முகக்கவசம் மற்றும்  கையுறை வழங்கப்பட்டுள்ளது பொதுமக்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 

தமிழக மக்களது சமூக அறிவுத் தரத்தை குமுதம் பத்திரிகை நிர்ணயிக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. தற்போது ஊரடங்கிலும் வாசகர்களின் ஆரோக்கியம் தான் முக்கியம் என்று கருதி முகக்கவசம் மற்றும்  கையுறை வழங்கப்பட்டுள்ளது பொதுமக்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 

தமிழ் வாசகர்களின் மனதில் கடந்த 73 ஆண்டுகளாக நீங்கா இடம் பிடித்து வரும் பாரம்பரிய இதழ் குமுதம். அனைத்து தரப்பு மக்களின் தேவைக்கு ஏற்ப ரசினைக்கு ஏற்ப செய்திகளை வழங்குவது குமுதம் இதழின் சிறப்பம்சங்களில் ஒன்று. தலைமுறைகளை தாண்டி அனைத்து தரப்பு மக்களையும் தன் எழுத்தின் வசம் வைத்திருக்கும் குமுதம் இதழ் மக்களின் தேவைகளை பற்றியும் யோசிக்க தவறியதில்லை. புத்தக வாசிப்பை நேசிப்பாக வைத்திருக்கும் கடந்த தலைமுறை, ஆன்லைனில் வாசிப்பை  தொடர்ந்து கொண்டிருக்கும் இன்றைய தலைமுறை என காலம் கடந்து மக்களின் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் குமுதம் இதழ் இந்த பெருந்தொற்று காலத்திலும் மக்களை சென்று சேர தவறியதில்லை. 

இந்நிலையில், கொரோனா பெருந்தோற்று காலத்திலும் மக்களின் எண்ணங்களை அறிந்து கொண்டு அதிரடி செய்திகள் மற்றும் சிறப்பு செய்திகளை வழங்கி வருகிறது. முக்கியமாக வாசகர்கள் ஆரோக்கியத்திலும்தன் கவனத்தை திருப்பி உள்ளது. இந்த பெருந்தொற்று காலத்தில் மக்கள் அனைவரும் பாதுகாப்பாய் இருக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்திய நேரத்தில், அதிரடியாக களத்தில் இறங்கிய குமுதம் இதழ் தன் வாசகர்களின் ஆரோக்கியத்தை முக்கியமாக கருதி ஏப்ரல் மற்றும் மே மாத இதழ்களுடன்  எப்போதும் விற்கும் விலையிலேயே  40 ரூபாய் விற்கக்கூடிய காட்டன் முக கவசத்தை இலவசமாக வழங்கியது. இது குமுதம் இதழ் வாசகர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கடைகளிலும் சுமார் 2 மணிநேரத்தில் குமுதம் வார இதழ் விற்று தீர்ந்துவிட்டது. 

இது தொடர்பாக பல்வேறு  தரப்பில் இருந்து இந்த செயல்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். அடுத்தது இதுபோன்று இந்த வாரம் ஏதாவது செய்ய வேண்டும் என்று திட்டமிட்டோம். கொரோனா காலத்தில் முகக் கவசத்தை அடுத்து கையுறை கொடுத்தால் மிக நன்றாக இருக்கும் எண்ணினோம். இதனையடுத்து, இந்த வாரம் குமுதம் வார இதழுடன் 60 ரூபாய் மதிப்புடைய காட்டன் கையுறை வழங்கப்பட்டுள்ளது. எப்போதும், வாசகர்களின் ஆரோக்கியத்தில்அக்கறை கொள்வதில் நாங்கள் உடன் இருக்கிறோம்  என்ற நம்பிக்கையை  குமுதம் இதழ் விதைத்திருக்கிறது. 

click me!