தமிழகத்தில் கொரோனாவில் வீரியம் மிக்க புதிய வகை வைரஸ் உருவானது... சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்..!

By vinoth kumarFirst Published Jun 7, 2020, 4:56 PM IST
Highlights

தமிழகத்தில் கொரோனாவில் புதிய வைரஸ் பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது க்ளேட் A13ஐ என்ற பெயரிலான அந்த வைரஸ் தீவிரத்தன்மை கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

தமிழகத்தில் கொரோனாவில் புதிய வைரஸ் பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது க்ளேட் A13ஐ என்ற பெயரிலான அந்த வைரஸ் தீவிரத்தன்மை கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

தமிழகத்தில் பிப்ரவரி மாதம் இறுதியில் பரவி கொரோனா வைரஸ்களில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில், ஏ1, ஏ2, ஏ3, பி1, பி2 என்ற நிலைகளில் பரவி வந்த வைரஸ் தொற்றானது தற்போது மாற்றம் ஏற்பட்டு  க்ளேட் ஏ13ஐ என்ற வைரசாக பரவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த வைரஸின் தாக்கம் சற்று அதிகமாக இருப்பதாகவும், வீரியம் கூடியதாக இருப்பதாகவும் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக இந்த வைரஸ் தொடர்பாக ஆராய்ச்சி நடந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். இந்த வைரஸ் தொற்றானது மகாராஷ்ராவில் இருந்து தமிழகத்தில் பரவி  இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். 

அது மட்டுமில்லாமல் தென் இந்தியாவில் பொறுத்த வரையில் தெலுங்கானா, ஆந்திரா, தமிழகம் போன்ற மாநிலங்களில் க்ளேட் ஏ13ஐ வைரஸ் பரவி வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.  இந்த வைரஸ் வீரியம் சற்று அதிகமாக இருந்தாலும் இந்த வைரஸை எதிர்கொள்வதற்கான தடுப்பு நடவடிகைகளையும் தமிழக சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வைரஸ்க்கான தடுப்பு மருந்துகள் வேறு ஏதாவது கொடுக்க வேண்டுமா என்பது தொடர்பான ஆராய்ச்சிகளும்  ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த கொரோனா வைரஸில் நிறைய வகைகள் உள்ளன.  இதில், ஏ1, ஏ2, ஏ3, பி1, பி2  போன்ற வகைகள் உள்ளது. இதில், இது ஒரு வகையான வைரஸ் என்று கண்டுபிடித்துள்ளனர். அது சற்று வீரியம் அதிகமாக இருப்பதால் வயதானவர்கள், குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைப்பதற்காக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறியுள்ளனர். 

க்ளேட் ஏ13ஐ என்ற வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்க்கரை நோய் அல்லது ரத்த கொதிப்பு நோயாளிகளை கண்டறிந்து அந்த நோயாளிகளுக்கு இன்சுலீன் அதிகம் கொடுத்து அவர்களின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதால் 59 சதவீத நோயாளிகள் சிகிச்சை முடிந்து நல்ல படியாக வீடு திரும்பியுள்ளனர். ஆகையால், எப்படிப்பட்ட பாதிப்பு வந்தாலும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே இருந்த வைரஸ் தொற்று ஒவ்வொரு காலகட்டத்திலும் அதிக மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கும். அந்த வகையில் இந்த புதிய வைரஸ் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே கொடுக்கப்பட்ட சிகிச்சைகளே கொடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

click me!