Tamilnadu encounter:ரவுடிகளை ரவுண்ட் கட்டி வேட்டையாட களமிறக்கப்பட்ட என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்..ஒழியுமா ரவுடிசம்?

By vinoth kumarFirst Published Dec 31, 2021, 9:04 AM IST
Highlights

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வலம் வந்த பல ரவுடிகளும் தாதாக்களும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தஞ்சமடைந்துள்ளனர். தமிழகத்தின் பல இடங்களில் நிகழும் படுகொலைகளுக்கு ஸ்கெட்ச் போட்டு கூலிப்படையை அனுப்பி வருவதும் இந்த தாதாக்கள்தான் என்று கூறப்படுகிறது. 

சென்னை புறநகர் பகுதிகளில் கொடிகட்டிப் பறக்கும் கட்ட பஞ்சாயத்து, மாமூல் வசூல் ஆகியவற்றை தடுக்க என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் என அழைக்கப்படும் கூடுதல் எஸ்.பி. வெள்ளத்துரை தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையை ஒட்டிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கட்டப்பஞ்சாயத்து, மாமூல் வசூல் கொடிகட்டிப்பறப்பதாக போலீசாருக்கு புகார்கள் குவிந்த வண்ணமாக இருந்து வருகின்றன. ரவுடிகள் இடையே நடைபெறும் மோதல் மற்றும் கொலை காரணமாக நிம்மதியாக வெளியில் சென்று வர முடியவில்லை என்று பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வலம் வந்த பல ரவுடிகளும் தாதாக்களும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தஞ்சமடைந்துள்ளனர். தமிழகத்தின் பல இடங்களில் நிகழும் படுகொலைகளுக்கு ஸ்கெட்ச் போட்டு கூலிப்படையை அனுப்பி வருவதும் இந்த தாதாக்கள்தான் என்று கூறப்படுகிறது. 

 

இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து செயல்களை தடுக்கவும், சிறு நிறுவனங்களிடம் மாமூல் வசூலிப்பதைத் தடுக்கவும் கூடுதல் எஸ்.பி வெள்ளைத்துரை தலைமையில், தமிழக காவல்துறை சிறப்பு படையை அமைத்துள்ளது. இந்த சிறப்புப் படை, கட்டப்பஞ்சாயத்துகளைக் கண்காணித்துத் தடுப்பது மட்டுமின்றி, சென்னை புறநகர், செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைப் பகுதிகளில் தொழில் நிறுவனங்களுக்குத் தொல்லை தரும் நபர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சிறப்புப் படை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கூடுதல் எஸ்பி வெள்ளத்துரை என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்.  2003ம் ஆண்டு அயோத்தி குப்பம் வீரமணி என்ற ரவுடியை இவர் என்கவுண்டர் செய்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2004 ம் ஆண்டு சந்தன கடத்தல் வீரப்பன் என்கவுண்டர் செய்த சிறப்பு அதிரடிப்படையில் இவர் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது திருவண்ணாமலை கூடுதல் எஸ்.பி.யாக வெள்ளத்துரை பணியாற்றி வருகிறார் . அவருக்கு கூடுதல் பொறுப்பாக சென்னை புறநகர் ரவுடிகளை ஒடுக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது.

click me!