JiO மற்றும் ACTNET இன் அட்டகாசம்!! கண்டுகொள்ளாத தமிழக அரசு..! எக்ஸ்க்ளூசிவ்

By Asianet TamilFirst Published Aug 22, 2019, 10:01 AM IST
Highlights

ஜியோ போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் தங்கள் இரும்புக்கரம் கொண்டு அத்தனையும் வளைத்து, இதுபோன்ற சட்டவிரோத செயல்களை செய்தாலும், அதற்கு போட்டியாக actnet  உள்ளிட்ட பல நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு கம்பங்களை நட்டு வருகின்றனர். 

முப்பது வருடங்களுக்கு முன்பே தமிழகத்தின் முதன்மை நகரமான சென்னையில் மின்சார வாரியத்திற்கு சொந்தமான கம்பிகள் எல்லாம் அகற்றப்பட்டு புதை வடமாக மாற்றப்பட்டது.

இந்தியாவிலேயே வேறு எந்த நகரத்திலும் இல்லாத அளவிற்கு எம்ஜிஆர் கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் நகரத்தை அழகு செய்யும் முயற்சிகள் மிகவும் திட்டமிடப்பட்டு நல்லமுறையில் செய்யப்பட்டன. மேலும் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய மின்கம்பிகளை கண்ணுக்குத் தெரியாத அளவில் மண்ணுக்குள் புதைக்கும் வேலைகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. 

இப்படி அரசு தரப்பிலேயே ஓடிஓடி உழைத்து கண்ணில் தெரிந்த மின்கம்பிகள் எல்லாம் மண்ணுக்குள் புதைக்கும் வேலைகளை பல வருடங்களாக செய்து முடித்துள்ளார்கள். இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களாக சென்னையில் என்ன நடக்கிறது என்பது கூட மக்களுக்கு புரியாத அளவில் லட்சக்கணக்கான மின்கம்பங்களை போன்ற இரும்பு கம்பங்கள் நடப்பட்டு, அது கான்கிரீட் கலவையால் பொருத்தி வைக்கப்படுகிறது. 

ஒவ்வொரு தெருக்களிலும் 2 முதல் 20 இரும்பு போஸ்ட்டுகள் கான்கிரீட் கலவையை கொண்டு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதில் தடிமனான ஒயர்கள் இழுத்துச் செல்லப்படுகின்றன. இது  அரசாங்கத்தின் திட்டம் சார்ந்த வேலையாக இருக்கும் என்று பலரும் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இது மின்சார துறையோ அல்லது அரசாங்கம் சார்ந்த துறைகள் சார்ந்த இரும்புக் கம்பங்கள் கிடையாது ; இது முழுக்க முழுக்க தனியார் வசமுள்ள தனியாரால் நடத்தப்படும் இன்டர்நெட் எனப்படும் இணைய சேவை வழங்கும் தனி நபருக்கு சொந்தமான நிறுவனங்களின் வேலையாகும்.

நீங்கள் இந்த புகைப்படங்களில் பார்க்கும் காட்சிகள்தான் சென்னை நகரம் முழுவதும் பரவி விரவிக் கிடக்கின்றன. இந்த அளவிற்கு எங்கு பார்த்தாலும் பொதுமக்களுக்கு இடைஞ்சல் கொடுக்கும் வகையிலும் அச்சுறுத்தும் மிதமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஏதாவது அளவுகோல் உள்ளதா?? என்பது பற்றி தெரியாமலும் அவர்கள் இஷ்டத்திற்கு எங்கு பார்த்தாலும் இரும்பு கம்பங்களை நட்டு கொண்டே செல்கிறார்கள். இந்த இரும்புக்  கம்பங்களை நினைத்த இடத்திலெல்லாம் நடுவதற்கு சரியான அனுமதி பெறப்பட்டதா?? இதற்கு அனுமதி வழங்கியவர்கள் யார்? என்பதற்கான அத்தாட்சி இல்லை. இந்த இரும்பு கம்பங்களை நடும் நபர்கள் இடமோ அல்லது அது தொடர்பாக வலம்வரும் அதிகாரிகளிடம் பதில் இல்லை என்பதுதான் உண்மை.

ஜியோ போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் தங்கள் இரும்புக்கரம் கொண்டு அத்தனையும் வளைத்து இதுபோன்ற சட்டவிரோத செயல்களை செய்தாலும், அதற்கு போட்டியாக actnet  உள்ளிட்ட பல நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு இந்த கம்பங்களை நட்டு வருகின்றனர். உண்மையில் இதற்கான அனுமதி உரிய அளவில் பெறப்பட்டு இந்த பணிகள் நடைபெறுகிறதா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும் என்பதே சென்னையில் உள்ள குடியிருப்பு வாசிகளின் தற்போதைய புதிய கோரிக்கையாக உள்ளது.

அதேபோன்று மாநகராட்சி கமிஷனர் மற்றும் அதிகாரிகளின் கவனத்தில் இந்த விஷயம் உள்ளதா?? என்பது குறித்தும் மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை அனுமதி பெற்று இருந்தாலும் கம்பங்கள் சாலையில் நடும் அளவு ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு விதமாக உள்ளதாக குற்றஞ்சாட்டுகின்றனர் பொதுமக்கள். இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிட்டு உரிய தீர்வு மக்களுக்கு கொடுக்க வேண்டுமென்பது அவசர அவசியமாக உள்ளது.

தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பது தானே கடந்த 40 ஆண்டுகால தமிழக அரசின் வரலாறாக உள்ளது.
 

click me!