ஜெயலலிதா போயஸ் இல்ல வழக்கு... தீர்ப்பு குறித்து நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 3, 2021, 4:19 PM IST
Highlights

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை கையகப்படுத்தியதை எதிர்த்தும், இழப்பீடு நிர்ணயித்ததை எதிர்த்தும் தீபா, தீபக் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை கையகப்படுத்தியதை எதிர்த்தும், இழப்பீடு நிர்ணயித்ததை எதிர்த்தும் தீபா, தீபக் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்  போயஸ் தோட்ட இல்லமான, வேதா நிலையத்தை,  நினைவு இல்லமாக மாற்ற அரசு முடிவெடுத்தது. அதன்படி, வேதா நிலையத்தை கையகப்படுத்திய அரசு, அதற்கான இழப்பீட்டு தொகையை அமர்வு நீதிமன்றத்தில் செலுத்தியது. வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தங்களிடம் ஆலோசிக்காமல் வேதா நிலையம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறி, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதேபோல,  67 கோடியே 90 லட்ச ரூபாய்  இழப்பீடு நிர்ணயித்த உத்தரவை எதிர்த்து,  தீபா உய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகளை நீதிபதி என்.சேஷசாயி விசாரித்தார். தீபா மற்றும் தீபக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஜெயலலிதாவிற்கு ரத்த முறை நேரடி வாரிசுகள் இல்லாததால், அவரது அண்ணன் பிள்ளைகளான தங்களை வாரிசுகளாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாகவும், அவர் வாழ்ந்த இடத்தை புனிதமாக கருதி முறையாக பராமரிக்க திட்டமிட்டிருந்த நிலையில், தங்களின் கருத்துகளை கேட்காமல் வேதா நிலையம் கையகப்படுத்தபட்டுள்ளதாக வாதிடப்பட்டது. மேலும்,  கையகப்படுத்த ஒப்புதலே தெரிவிக்காத நிலையில், அந்த நிலத்தை மதிப்பீடு செய்தும், அசையும் சொத்துக்களை முறையாக மதிப்பீடு செய்யாமலும் 68 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

தமிழக அரசு தரப்பில், வேதா நிலையத்தை கையகப்படுத்தும் முன்பே அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்ததாகவும், பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் வேதா நிலையத்தை அரசு கையகப்படுத்தி நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கையை கண்டிப்பாக பாராட்டி இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட விதத்திலும் பல்வேறு பிரச்சினைகளை ஜெயலலிதா எதிர்கொண்டபோது தீபா, தீபக் ஆகியோர் உறுதுணையாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்ததை அடுத்து இந்த வழக்குகளின் தீர்ப்பை,  நீதிபதி சேஷசாயி, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

click me!