கட்டுக்கடங்காத வேகத்தில் கொரோனா... சென்னையில் பாதிப்பு புதிய உச்சம்... அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

Published : Apr 01, 2021, 07:12 PM ISTUpdated : Apr 01, 2021, 07:28 PM IST
கட்டுக்கடங்காத வேகத்தில் கொரோனா... சென்னையில் பாதிப்பு புதிய உச்சம்... அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

சுருக்கம்

சென்னையில் மீண்டும் முதன்முறையாக ஒரேநாளில் 1,083 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம்  பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் மீண்டும் முதன்முறையாக ஒரேநாளில் 1,083 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம்  பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- கடந்த 24 மணிநேரத்தில் 2,817 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதில், சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1083ஆக உயர்ந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,89,490ஆக அதிகரித்து உள்ளது. இன்று மட்டும் 85,876 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதுவரை 1,96,81, 244 மாதிரிகள் சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 

1,697பேர் ஆண்கள், 1,120 பேர் பெண்கள் என பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 5,37,079 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,52,375 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 36 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 1,634 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 

இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8,59,709ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதித்த 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 12,738 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 17,043 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!