IT Raid: ஐடி ரெய்டுக்கு இதுதான் காரணமா? தீயாய் பரவும் தகவல்

By vinoth kumarFirst Published Dec 3, 2021, 12:43 PM IST
Highlights

சரவணா ஸ்டோர் குழுமத்தில் நடந்த ரெய்டுக்கு என்ன காரணம்? என்பது குறித்த சில தகவல்கள் தீயாக பரவி வருகிறது.

சரவணா ஸ்டோர் குழுமத்தில் நடந்த ரெய்டுக்கு என்ன காரணம்? என்பது குறித்த சில தகவல்கள் தீயாக பரவி வருகிறது.

புகழ் பெற்ற வணிக வழக்கங்களை கொண்ட சரவணா ஸ்டோர்ஸை முதலில் உருவாக்கிய செல்வரத்தினம் நெல்லையில் பிறந்து சென்னையில் பிழைப்பு தேடி வந்தவர். இங்கு தெரு தெருவாக காபி வியாபாரம் செய்து வந்த சரவண செல்வரத்தினம் தனது கடுமையான முயற்சியால் சரவணா ஸ்டோர்ஸ் என்னும் துணிக்கடை உருவாக்கி அதற்கு தனது இரு சகோதரர்களையும் பங்குதாரர்களாக மாற்றினார். பின்னர் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் சரவணா ஸ்டோர்ஸ் தனது கிளைகளை பரப்பி அசைக்க முடியாத சாம்ராஜ்யமாக மாறியது.

 

இவ்வாறு காபி விற்பனையில் துவங்கி பின் கோடீஸ்வரராக மாறினர். தற்போது சரவணா ஸ்டார் குழுமத்திற்கு சொந்தமாக பல பெயர்களில், பல கடைகள் இயக்கி வந்தாலும். அந்தந்த கடைகளின் உரிமையாளர்கள் வேறு தான்.

 

இந்நிலையில், சூப்பர் சரவணா ஸ்டார் உரிமையாளர் நடத்தி வரும், உரிமையாளருக்கு சொந்தமாக சென்னை புரசைவாக்கம், தியாகராயர் நகர், போரூர், குரோம்பேட்டை பகுதிகளில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட 12 இடங்களில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுளளது. இந்த ஐடி ரெய்டுக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, சரிவர வரி காட்டாமல் வரி ஏய்ப்பு செய்துள்ளதால் தானாம்.

 

click me!