சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு இதுதான் காரணம்…! இந்தியன் ஆயில் இயக்குனர் சொன்ன விளக்கம்.!

By manimegalai aFirst Published Oct 6, 2021, 6:12 PM IST
Highlights

இந்தியாவில் 90 சதவீதம் மக்கள் வீடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தினாலும், அதில் 50 சதவீதத்திற்கு குறைவாகதான் உள்நாட்டில் உற்பத்தியாகிறது.

இந்தியாவில் 90 சதவீதம் மக்கள் வீடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தினாலும், அதில் 50 சதவீதத்திற்கு குறைவாகதான் உள்நாட்டில் உற்பத்தியாகிறது.

இந்தியாவில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாதம் இருமுறை உயர்ந்துகொண்டே செல்வது இல்லத்தரசிகளையும், பொதுமக்களையும் கொதிப்படையச் செய்துள்ளது. இன்றைய தினம் கூடல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் 15 ரூபாய் உயர்த்தியதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நடப்பாண்டில் மட்டும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 205 ரூபாய் அதிகரித்துள்ளது. ராக்கெட் வேகத்தில் செல்லும் எரிபொருள் விலையை கடுப்படுத்த முடியாதது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்தநியலையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு குறித்து இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குனர், ராம்குமார் விளக்கம் அளித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் பொருட்டு வரும் 2025 ஆண்டு முதல் பெட்ரோலுடன் 20% எத்தனால் கலக்கப்படும் என இந்தியன் ஆயில் நிறுவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குனர் எஸ்.எஸ்.வி.ராம்குமார் தெரிவித்துள்ளார்.

click me!