இது மட்டும் நடந்தால் அடுத்த வாரம் ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி..!

By vinoth kumarFirst Published Jan 24, 2022, 7:17 AM IST
Highlights

கொரோனா 3வது அலை தொடங்கியதிலிருந்தே முதல்வர் ஸ்டாலின் சிறப்பான நடவடிக்கையில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு தமிழகத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்போடு மிகச்சிறப்பாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இரண்டு வார காலமாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கிற்கு, மக்கள் சிறப்பாக ஒத்துழைப்பு தருகிறார்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்;- கொரோனா 3வது அலை தொடங்கியதிலிருந்தே முதல்வர் ஸ்டாலின் சிறப்பான நடவடிக்கையில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு தமிழகத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்போடு மிகச்சிறப்பாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இரண்டு வார காலமாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கிற்கு, மக்கள் சிறப்பாக ஒத்துழைப்பு தருகிறார்கள். 3வது அலையில் இருந்து தப்பிப்பதற்காக முதல்வர் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு ஊரடங்கு வெற்றி ஓர் சான்றாக இருந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தொற்றின் அளவு என்பது குறைந்து கொண்டிருக்கிறது. சென்னையில் 9 ஆயிரம் அளவுக்கு உயர்ந்த தொற்றின் அளவு  6 ஆயிரம்  என்ற அளவுக்கு குறைந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவின் பெருநகரங்களில் தொற்றின் அளவு குறைந்து வருவது பெரும் ஆறுதலாக இருக்கிறது. தொற்றுக்கு விரைவில் முற்றுப்புள்ளி ஏற்படும்போது முழு ஊரடங்கு தேவையில்லாத ஒன்றாகும் இருக்குமெனவும், தொற்று குறைந்தால் வரும் வாரங்களில் ஞாயிறு முழு ஊரடங்கு இருக்காது எனவும் தெரிவித்தார்.

தொற்றின் அளவு 30 ஆயிரமாக இருந்த போது இறப்பு சதவிகிதம் அடிப்படையில் குறைந்து உள்ளது. தடுப்பூசி முதல் தவணைக் கூட போட்டுக் கொள்ளதவர்கள், வயது மூப்பு காரணமாக இணைநோய் உள்ளவர்கள் தான் 95 சதவிகிதம் இறப்பு என்பது இருந்து கொண்டிருக்கிறது எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

click me!