Vadapalani Murugan Temple:பக்தர்கள் இன்றி 14 ஆண்டுகளுக்கு பிறகு வடபழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

By vinoth kumarFirst Published Jan 23, 2022, 11:13 AM IST
Highlights

சென்னை வடபழனி முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சென்னையில் உள்ளவர்கள் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருவது வழக்கம். இந்த கோயிலில் கடந்த 2007ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பிறகு தற்போது கோயில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. 

வடபழனி முருகன் கோவிலில்  கும்பாபிஷேகம் இன்று பக்தி பரவசத்துடன் நடைபெற்று வருகிறது. வார இறுதி நாளான இன்று கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால்,  பொதுமக்கள் அனுமதியின்றி கும்பாபிஷேகம் நடைபெற்று வருகிறது. இதனை பொதுமக்கள் கண்டு ரசிக்க ஆன்லைனில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. 

சென்னை வடபழனி முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சென்னையில் உள்ளவர்கள் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருவது வழக்கம். இந்த கோயிலில் கடந்த 2007ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பிறகு தற்போது கோயில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. 

இதற்கான யாகசாலை பூஜைகள் வியாழக்கிழமையன்று தொடங்கின. கோயிலுக்குள் 108 குண்டங்களுடன் பிரம்மாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. யாகசாலையில் வைத்து பூஜிப்பதற்காக கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகளில் இருந்தும், ராமேஸ்வரம் தீர்த்தக்கிணறு, அறுபடை முருகன் கோயில்கள் என 15 இடங்களில் இருந்தும் புண்ணிய தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. வெள்ளிக்கிழமையன்று காலை 9 மணிக்கு இரண்டாம் கால பூஜை தொடங்கி பகல் 12 மணிக்கு மகா பூர்ணாஹூதியுடன் நிறைவு பெற்றது. 

பின்னர் மாலை 5.30 மணிக்கு மூன்றாம் கால பூஜைகள் நடந்தன. நேற்றும் யாகசாலை பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றன. இதைத் தொடர்ந்து இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் மற்றும் முழு ஊரடங்கு காரணமாக கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் அனைத்தும் தொலைக்காட்சி, யூ-டியூப் சேனல் போன்றவை மூலம் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. 

click me!