கிராமப்புற இளைஞர்களுக்கு குட் நியூஸ்... இனி தமிழிலும் வங்கி தேர்வு எழுதலாம்..!

By vinoth kumarFirst Published Jul 4, 2019, 6:58 PM IST
Highlights

கிராமப்புற வங்கிகளுக்கான தேர்வுகளை இனி தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் எழுதலாம் என மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கிராமப்புற வங்கிகளுக்கான தேர்வுகளை இனி தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் எழுதலாம் என மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

பொதுத்துறை வங்கி பணிகளுக்கான தேர்வை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனமான (IBPS) நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் பொதுவாக ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே கேள்விகள் கேட்கப்படுகின்றன.  

இந்நிலையில், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உறுதி செய்யும் வகையில், கிராமப்புற வங்கி வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி தவிர 13 பிராந்திய மொழிகளில் கேள்வித் தாள்கள் வழங்கப்படும் என மக்களவையில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

 

இதனால் தமிழ், தெலுங்கு, உருது, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், கொங்கனி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, ஒடியா, பஞ்சாபி மொழிகளிலும் கேள்வித் தாள்கள் வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் கூறினார். 

click me!