மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு... விசாரணைக்கு கேட் போட்ட உயர்நீதிமன்றம்..!

Published : Jul 04, 2019, 01:12 PM IST
மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு... விசாரணைக்கு கேட் போட்ட உயர்நீதிமன்றம்..!

சுருக்கம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. 

 

ஜனவரி 20-ம் தேதி சோழிங்கநல்லூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் முதல்வர் பற்றி அவதூறாக பேசியதாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது நாளை மு.க.ஸ்டாலின் ஆஜராக வேண்டும் என்று செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  

இந்நிலையில், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணைக்கு தடை கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல்வர் குறித்து பேசியதற்காக அரசு வழக்கறிஞர் வழக்கு தொடர முடியாது எனக் கூறிய நீதிமன்றம் தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்குத் தடை விதித்து உத்தரவிட்டது.

PREV
click me!

Recommended Stories

சென்னையில் 8 மாடிகள் கொண்ட BSNL அலுவலகத்தில் தீ விபத்து! அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்.! நடந்தது என்ன?
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!