Breaking நீதிமன்ற உத்தரவை மதிக்காத ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவியை பறிக்கலாம்.. சாட்டையை சுழற்றிய உயர்நீதிமன்றம்..!

Published : Dec 25, 2020, 01:26 PM IST
Breaking  நீதிமன்ற உத்தரவை மதிக்காத ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவியை பறிக்கலாம்.. சாட்டையை சுழற்றிய உயர்நீதிமன்றம்..!

சுருக்கம்

நீதிமன்ற உத்தரவை துச்சமான நினைத்து புறக்கணிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவிகளை பறிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

நீதிமன்ற உத்தரவை துச்சமான நினைத்து புறக்கணிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவிகளை பறிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

1998-ம் ஆண்டு தாம்பரம் நகராட்சி ஆணையராக பணியாற்றிய பழனி எவ்வித டெண்டரும் கோராமால் 83 ஆயிரத்து 920 ரூபாய் மதிப்பிலான பல்வேறு பணிகளை டெண்டர் விடாமல் மேற்கொண்டதாக கூறி, அவருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டது. குற்றச்சாட்டுகளை விசாரித்த அதிகாரி குற்றச்சாட்டுகள் நிருபணம் ஆகவில்லை என அறிக்கை அளிக்கிறார். ஆனால், நகராட்சி நிர்வாகத் துறை செயலாளர் அந்த அறிக்கையை ஏற்க மறுத்ததுடன், துறை ரீதியான விசாரணை நிலுவையில் வைத்து 2001 ஆம் ஆண்டு அவர் பணி ஓய்வு பெற அனுமதித்தார்.

பின்னர் 2005 ஆம் ஆண்டு தேவையில்லாமல் அவசியமில்லாமல் அவசரப்பணிகளை மேற்கொள்வதற்கான சட்டப்பிரிவுகளை பயன்படுத்தி 83 ஆயிரத்து 920 ரூபாய் மதிப்பிலான பணிகளை மேற்கொண்டதற்காக அவருடைய ஓய்வூதியத்தில் ஒவ்வொரு மாதமும் 200 ரூபாய் வீதம் 12 மாதங்களுக்கு பிடித்தம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஓய்வு பெற்ற நகராட்சி ஆணையர் பழனி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் பதிலளித்த தமிழக அரசு, அனைத்து விதிகளையும் பின்பற்றியே தண்டனை விதிக்கப்பட்டதாகவும், அதில் எந்த விதிமீறலும் இல்லை எனவும் தெரிவித்திருந்தது. ஆனால், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் ஏற்க மறுத்து. பழனி மீதான நடவடிக்கையை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறார். எனனென்றால் தெரு விளக்குகளுக்கு பியூஸ் கேரியர் வாங்கியது, சாலையில் கொட்டப்பட்ட ஜல்லிகளை அள்ளுவது,  நீர்த்தேக்கத் தொட்டிக்கு மின் மோட்டார் வாங்கியது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக  83 ஆயிரத்து 920 ரூபாய் செலவழித்துள்ளார். ஒரு லட்சத்திற்கும் குறைவான தொகை தான். அதேசமயம் இது அவசரகால பணிகள் இல்லை என கூறமுடியாது. ஆகையால், பழனிக்கு ஓய்வூதியத்தில் பிடித்த செய்ய வேண்டும் என்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் பிறப்பித்தாலும் அதை செயல்படுத்துவதில் தாமதப்படுத்துவதாகவும், அலட்சிய போக்கில் செயல்படுதாவும் நீதிபதி கூறினர். மேலும், நீதிமன்ற உத்தரவுகளை துச்சமாக நினைக்கும் அதிகாரிகளின் ஐஏஎஸ் பதவியை பறிக்க வேண்டுமெனவும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.  நீதிமன்ற உத்தரவுக்கு கீழ்படியாமல் இருப்பது கடமையை செய்யாமல் இருப்பதற்கு சமம் என்று தெரிவித்து பழனிக்கு எதிராக வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் ழுமுமையாக தள்ளுபடி செய்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

டேட்டா திருடும் ஏர்டெல்..! 100mbps க்கு வெறும் 40 தான் கிடைக்குது.. சென்னையில் ஷோரூம் முன்பு போராட்டம்..
தினமும் 20 மாத்திரைகள் சாப்பிடுகிறேன்! உருக்கமாக பேசிய நடிகை மீரா மிதுன்! அதிரடி காட்டிய கோர்ட்!