சென்னை மக்களுக்கு குட்நியூஸ்... குப்பை கட்டணத்துக்கு குட்பை... மாநகராட்சி அதிரடி அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Dec 24, 2020, 12:00 PM IST
Highlights

சென்னையில் குப்பைக்கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்  தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னையில் குப்பைக்கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்  தகவல் தெரிவித்துள்ளார். 

சென்னை மாநகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம், 2021 ஜனவரி முதல் சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும். அதாவது, திறந்த வெளி பொது இடங்களில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு ஒரு தனிக் கட்டணம், 500 பேருக்குக் குறைவான கூட்டம் என்றால் 5,000 ரூபாய், 501 முதல் 1000 பேர் வரை கூட்டம் என்றால் 10 ஆயிரம் ரூபாய், 1,000 பேருக்கு மேல் கூட்டம் என்றால் 20 ஆயிரம் ரூபாய் என்று மாநகராட்சி அறிவித்திருந்தது.

குப்பை கட்டணம் அறிவிப்பு பேரிடரில் தவிக்கும் மக்களின் அடிவயிற்றில் அடிப்பது என மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், சென்னையில் குப்பை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில்;- திட்டக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் முதல்வர் அறிவுறுத்தலின்படி நிறுத்தி வைக்கப்படுகிறது. வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு நல சங்கங்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

click me!