நிபா வைரஸ் எப்படி பரவும்? தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்..!

By vinoth kumarFirst Published Sep 5, 2021, 4:23 PM IST
Highlights

கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பே இன்னும் முடியாத நிலையில் நிபா வைரஸ் தொடங்கி உள்ள நிலையில் அதிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பே இன்னும் முடியாத நிலையில் நிபா வைரஸ் தொடங்கி உள்ள நிலையில் அதிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை கூறியுள்ளது. 

இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களை விட கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் இருந்து இன்னும் மீளாத நிலையில் தற்போது நிபா வைரஸ் மீண்டும் பரவுவது மக்களை அச்சமடைய செய்துள்ளது. இந்நிலையில், கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் சத்தமங்கலம் கிராத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் நிபா வைரசால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்தார். இதையடுத்து மத்திய அரசின் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையக் குழுவினர் கேரளாவிற்கு விரைந்துள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறித்தியுள்ளார். 

நிபா வைரஸ் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை கூறுகையில்;- நிபா வைரஸ் வௌவால்கள், பன்றிகள் மூலம் மனிதர்களுக்குப் பரவுகின்றது. சுகாதாரமற்ற உணவுகளாலும் நிபா வைரஸ் மனிதர்களிடம் நேரடியாக பரவுகிறது. நிபா வைரஸ் பாதிப்புக்கு தடுப்பூசியோ, உரிய சிகிச்சை முறைகளை இதுவரை இல்லை. காய்ச்சல், தலைவலி, உடல்வலி, வாந்தி, தொண்டை புண் போன்றவை நிபா காய்ச்சல் அறிகுறிகளாகும். 

பன்றிகள், பழந்தின்னி வௌவால்களும் தான்  நிபா வைரஸ் பரவலுக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. எனவே விலங்குகளால் கடிக்கப்பட்ட பழங்களை உண்பதை தவிர்ப்பதுடன், மற்ற பழங்களையும் நன்கு கழுவி உண்பது வைரஸ் பரவலை தடுக்க உதவும் என சுகாதாரத்துறையினர் கூறுகின்றனர். 

click me!