இந்தியாவின் 74வது சுதந்திர தினம்: ஹிந்துஸ்தான் சர்வதேச பள்ளியின் கின்னஸ் உலக சாதனை முயற்சி..!

By karthikeyan VFirst Published Aug 10, 2020, 8:34 PM IST
Highlights

ஹிந்துஸ்தான் சர்வதேச பள்ளியின் கலை ஆசிரியர் ஆர்.சிவராமன் ஆகஸ்ட் 14 காலை 6 முதல் ஆகஸ்ட் 15 காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தேசப்பிதா மகாத்மா காந்தி ஓவியத்தை 2020 சதுர அடியில் வரைந்து கின்னஸ் சாதனைக்கு முயற்சிக்கிறார்.
 

ஹிந்துஸ்தான் சர்வதேச பள்ளியின் கலை ஆசிரியர் ஆர்.சிவராமன் ஆகஸ்ட் 14 காலை 6 முதல் ஆகஸ்ட் 15 காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தேசப்பிதா மகாத்மா காந்தி ஓவியத்தை 2020 சதுர அடியில் வரைந்து கின்னஸ் சாதனைக்கு முயற்சிக்கிறார்.

ஹிந்துஸ்தான் சர்வதேச பள்ளிகள், பல மகத்தான மற்றும் உன்னதமான செயல்பாடுகளுக்கு பெயர்போனவை. சமூக ஈடுபாடு, விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் முன்மாதிரியாக திகழ்கின்றன. அந்தவகையில்,  ஹிந்துஸ்தான் சர்வதேச பள்ளி ஒரு புதிய மைல்கல்லை நிர்ணயிக்க தீர்மானித்துள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 14ம் தேதி காலை 6 மணி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி காலை 6 மணிக்குள்ளான 24 மணி நேரத்தில் கின்னஸ் சாதனைக்கான முயற்சியை முன்னெடுத்துள்ளது ஹிந்துஸ்தான் பள்ளி.

சென்னை கிண்டியில் உள்ள ஹிந்துஸ்தான் சர்வதேச பள்ளி,  இந்த அபாரமான பணியை செய்ய வளர்ந்துவரும் திறமைசாலியான திரு.ஆர்.சிவராமனை ஊக்குவித்து வருகிறது. ஹிந்துஸ்தான் சர்வதேச பள்ளியில் கலை ஆசிரியர் ஆர். சிவராமன் நுண்கலைத் துறையில் ஆர்வமுள்ள இளம் திறமைசாலி. திறமையான அவரது அழகியல் உணர்வு பல வெற்றிகளைப் பெறுவதில் அவரது ஆர்வத்தைத் தூண்டியது. சிவராமன் 2007 முதல் ஒரு கலைஞராக தனது கலைகளுக்கு நிறைய பாராட்டுகளை பெற்றவர்.  தமிழ்நாடு அரசு விருது, கலைமாமணி விருது, லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் என பல கௌரவமிக்க, பெருமைமிகு விருதுகளை பெற்றுள்ளார்.

சிவராமன் தனது கலைத்திறனை பயன்படுத்தி, தேசப்பிதா மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்துவதில் தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறார். ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவின் சுதந்திரத்தை நினைவுகூரும் விதமாக செய்யப்படுகிறது. இதில் தனித்துவமான விஷயம் என்னவென்றால், காஃபித்தூளை மட்டுமே கொண்டு மகாத்மா காந்தியின் ஓவியத்தை அற்புதமாக உருவாக்க இருக்கிறார். ஹிந்துஸ்தான் சர்வதேச பள்ளியின் கூடைப்பந்து மைதானத்தில் 2020 சதுர அடி பரப்பளவில் இந்த சாதனை நிகழ்த்தப்படவுள்ளது. கிண்டி ஹிந்துஸ்தான் சர்வதேச பள்ளி மற்றும் சிவராமன் ஆகிய இருவரையும் சாதனையை நோக்கி உயர்த்த, ஆதரவளித்து உற்சாகப்படுத்துங்கள்.

click me!