தமிழ்நாட்டில் 3 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.! முழுமையாக கட்டுக்குள் வந்த பாதிப்பு.. ஆறுதலளிக்கும் எண்ணிக்கை

Published : Aug 10, 2020, 07:46 PM IST
தமிழ்நாட்டில் 3 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.! முழுமையாக கட்டுக்குள் வந்த பாதிப்பு.. ஆறுதலளிக்கும் எண்ணிக்கை

சுருக்கம்

தமிழ்நாட்டில் இன்று மேலும் 5914 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,02,815ஆக அதிகரித்துள்ளது.   

தமிழ்நாட்டில் இன்று மேலும் 5914 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,02,815ஆக அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளை தமிழக அரசு மிகச்சிறப்பாக மேற்கொண்டுவருகிறது. அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலமே, தொற்றுள்ளவர்களை அதிகமாக கண்டறிந்து விரைவில் கட்டுப்படுத்த முடியும். அந்தவகையில், தமிழ்நாட்டில் அதிகமான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. 

தமிழ்நாட்டில் நேற்று அதிகபட்சமாக ஒரே நாளில் 70,186 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று 67,153 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 5914 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,02,815ஆக அதிகரித்துள்ளது. 

 

சென்னையில் கடந்த சில தினங்களாக ஆயிரத்துக்கும் குறைவான பாதிப்புகளே உறுதியாகிவரும் நிலையில் இன்று 976 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. எனவே சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,10,121ஆக அதிகரித்துள்ளது. மற்ற மாவட்டங்களிலும் பாதிப்பு குறைந்துவருகிறது.

இன்று 6037 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,44,675ஆக அதிகரித்துள்ளது. இன்று 114 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 5041ஆக அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் நேற்று பதிவான பாதிப்பை விட அதிகமானோர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் இன்றும் பாதிப்பை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகம்.
 

PREV
click me!

Recommended Stories

ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு
போதையில் தாறுமாறாக ஓடிய கார்! விரட்டி சென்ற காவலர் உயிரி*ழப்பு! இளைஞரை HIT and RUN பிரிவில் தூக்கிய போலீஸ்!