மிரட்ட போகும் கனமழை.. மாவட்ட நிர்வாகம் கொஞ்சம் அலர்ட்டா இருங்க.. தமிழக அரசு திடீர் எச்சரிக்கையால் பீதி.!

By vinoth kumar  |  First Published Nov 19, 2022, 11:48 AM IST

 தமிழகத்தில் நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது


3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை மாநகர ஆணையருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 29ம் தேதி தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. தமிழகதத்தில் 122 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் 44 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில்  உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக  வலுப்பெற்றுள்ளது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- பிரியா மரண வழக்கு! கைவிரித்த கோர்ட்! போன் சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு டாக்டர்கள் தலைமறைவு.. பிடிக்க 3 தனிப்படை

undefined

இதன் காரணமாக தமிழகத்தில் நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது.

இந்நிலையில், கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகர ஆணையருக்கு   வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதனால், பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க;-  எமன் ரூபத்தில் வந்த கடற்கரை பேருந்து! தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த நிறைமாத கர்ப்பிணி! வயிற்றிலேயே குழந்தை பலி.!

click me!