மதுரை எய்ம்ஸ் தலைவரும், ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனின் மாமனார் மாரடைப்பால் காலமானார்..!

Published : Jan 13, 2023, 07:50 AM ISTUpdated : Jan 13, 2023, 08:16 AM IST
மதுரை எய்ம்ஸ் தலைவரும், ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனின் மாமனார் மாரடைப்பால் காலமானார்..!

சுருக்கம்

மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக கடந்த 22ம் தேதி மூளை நரம்பியல் மருத்துவரான நாகராஜன் வெங்கட்ராமனை மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டது. 

மதுரை எய்ம்ஸ் தலைவரும், தமிழக கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாமனாருமான நாகராஜன் மாரடைப்பு காரணமாக காலமானார். 

மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக கடந்த 22ம் தேதி மூளை நரம்பியல் மருத்துவரான நாகராஜனை(77) மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் நியமித்தது. இந்நிலையில், திடீரென நள்ளிரவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து சென்னை ராமச்சந்திர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி  நாகராஜன் வெங்கட்ராமன் உயிரிழந்ததார். இவரது உடல் திருவான்மியூரில் உள்ள இல்லத்தில் நாகராஜனின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவர் தமிழக கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுதொடர்பாக நாகராஜனின் மறைந்த செய்தியை அவரது மருமகனும், தமிழ்நாடு கூட்டுறவுத் துறை செயலாளருமான ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு
போதையில் தாறுமாறாக ஓடிய கார்! விரட்டி சென்ற காவலர் உயிரி*ழப்பு! இளைஞரை HIT and RUN பிரிவில் தூக்கிய போலீஸ்!