37 கோடி மதிப்புள்ள 500 வென்டிலேட்டர்களை கொரோனா சிகிச்சைக்கு வழங்கிய HCL நிறுவனம்!

By manimegalai aFirst Published Apr 1, 2020, 6:26 PM IST
Highlights

கொரோனா பாதிப்புகளை சரி செய்யும் விதமாக, முதலமைச்சரின் நிர்வாண நிதிக்கும், பிரதமரின் நிவாரண நிதிக்கும் பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் தங்களால் முடிந்த உதவிகளை அளித்து வருகிறார்கள்.
 

கொரோனா பாதிப்புகளை சரி செய்யும் விதமாக, முதலமைச்சரின் நிர்வாண நிதிக்கும், பிரதமரின் நிவாரண நிதிக்கும் பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் தங்களால் முடிந்த உதவிகளை அளித்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது, கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 500 வென்டிலேட்டர்களை தமிழக அரசுக்கு HCL நிறுவனம் வழங்கியுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள தகவலில், மாண்புமிகு அம்மாவின் அரசு கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. தமிழ்நாடு அரசுக்கு தோள் கொடுக்கும் விதமாக பொதுமக்களும், நிறுவனங்களும், அமைப்புகளும், நோய் நிவாரண நடவடிக்கைக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களின் பங்களிப்பை அளித்து வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக தற்போது HCL  நிறுவனம் 37.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 500 வென்டிலேட்டர்களை,  மருத்துவ சிகிச்சைக்காக தமிழ்நாடு அரசு தர முன்வந்துள்ளது. சூழ்நிலை கருதி நிறுவனம் செய்த இந்த உதவிக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாடு மக்களின் சார்பாக தனது மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். 

click me!