இந்த டேட்டுல வேளச்சேரி பீனிக்ஸ் மால் போனீங்களா... உடனே கொரோனா இருக்கான்னு செக் பண்ணுங்க..!

By vinoth kumarFirst Published Apr 1, 2020, 6:14 PM IST
Highlights

சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,  வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் மார்ச் 10ம் தேதி முதல் 17ம் தேதி வரை அந்த கடைக்கு சென்றவர்களுக்கு கொரோனா பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட அந்த நாட்களில் அந்த கடைக்குச் சென்றவர்கள் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் இரு பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மார்ச் 10 முதல் 17ம் தேதி வரை அங்கு சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி  அதிரடியாக கூறியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடுமையாக எடுக்கப்பட்டு வருகின்றன. சமுதாயப் பரவல் ஏற்பட்டுவிடாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. இதனால் 21 நாட்கள் நாடு முழுவதும்  ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவையைத் தவிர்த்து வெளியில் வருபவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்து வருகின்றனர். 

இதுவரை தமிழகத்தில் 124 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த நபர் தற்போது திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 28ம் தேதி வெளியான செய்தியில், பீனிக்ஸ் மாலில் பணிபுரிந்து வந்த 25 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தப் பெண் தற்போது அரியலூரில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த பெண்ணுக்கு கேரளாவிலிருந்து வந்த வாடிக்கையாளரிடம் இருந்து தொற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,  வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் மார்ச் 10ம் தேதி முதல் 17ம் தேதி வரை அந்த கடைக்கு சென்றவர்களுக்கு கொரோனா பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட அந்த நாட்களில் அந்த கடைக்குச் சென்றவர்கள் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் நோய் தொற்றுக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

click me!