"ஆதார் இல்லாதவங்களுக்கும் அட்ரஸ் நம்ம சென்னை " - மெட்ராஸ் டேக்கு ஹர்பஜன் சிங் வாழ்த்து ..

Published : Aug 22, 2019, 05:50 PM ISTUpdated : Aug 22, 2019, 05:52 PM IST
"ஆதார் இல்லாதவங்களுக்கும் அட்ரஸ் நம்ம சென்னை " - மெட்ராஸ் டேக்கு  ஹர்பஜன் சிங் வாழ்த்து ..

சுருக்கம்

சென்னையின் 380 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அதற்கு வாழ்த்து தெரிவித்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் டிவிட் செய்துள்ளார் .  

தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு  இன்று 380 வது பிறந்தநாள் . இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு சென்னைவாசிகளால் உற்சாகமாக கொண்டாப்பட்டு வருகிறது . பலரும் சென்னை மாநகரத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் .

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் ஹர்பஜன் சிங் தமிழகத்தோடு மிகவும் ஒன்றிப் போனவர்  . தமிழ்நாட்டில் கொண்டாடப் படும் முக்கிய விழாக்களுக்கு தமிழில் வாழ்த்துச் செய்தி பதிவு செய்வார். அந்த வகையில் சென்னை தினத்திற்கு வாழ்த்தியுள்ளார் . அதில் அவர் கூறியிருப்பது :

கலீஜ் ,டௌலட், பிசுக்கோத், நைனா ,ஓசி ,பிஸ்து ,அட்டு,பேஜார் ,அள்ளு,தல ,மாமே  ,மாமி , இப்படி எத்தனை வார்த்தைகள் நம்ம சென்னையை அலங்கரிக்க ..ஆதார் கார்டு இல்லாதவங்களுக்கும் அட்ரஸ் நம்ம சென்னை தாங்க.. சென்னை என்பது "ஊர் பெயர்" .. மெட்ராஸ் என்பது "உணர்ச்சி" ..

இவ்வாறு தனது ட்விட்டர் பதிவில் சென்னை தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ஹர்பஜன் சிங் .

#chennaiday #MadrasDay #Madras380

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!