இஸ்ரோவின் தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை முதல்வர் பழனிச்சாமி இன்று தலைமை செயலகத்தில் வைத்து வழங்கினார் .
கடந்த மூன்று வருடங்களாக அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு சுதந்திர தினத்தன்று மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பெயரில் தமிழக அரசு விருது வழங்கி சிறப்பித்து வருகிறது .
அதன்படி இந்த வருடத்திற்கான விருது இஸ்ரோவின் தலைவர் சிவனுக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது . சுதந்திர தினத்தன்று இந்த விருதை பெற்று கொள்ள இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அழைப்பும் அனுப்பப்பட்டது . ஆனால் சந்திராயன் 2 விண்கலம் சம்பந்தமான பணிகளில் சிவன் ஈடுபட்டிருந்ததால் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு விருதை பெற்று கொள்ளவில்லை .
இந்த நிலையில் இன்று சென்னை தலைமை செயலகத்துக்கு நேரில் வந்த இஸ்ரோ தலைவர் சிவன் , முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கரங்களால் விருதை பெற்றுக் கொண்டார் . அவருக்கு பதக்கமும் , சான்றிதழும் , காசோலையையும் முதல்வர் வழங்கினார் .
இஸ்ரோ தலைவர் சிவன் பல விருதைகளை பெற்றிருக்கிறார் . 1999 ம் ஆண்டு விக்ரம் சாராபாய் விருதும் , 2007 ம் ஆண்டு இஸ்ரோ விருதும் ,2012 ம் ஆண்டில் டாக்டர் பிரயன் விருதும் பெற்றிருக்கிறார் .