சென்னையை தவிர நாளை அனைத்து மாவட்டங்களிலும் ரத்து... தமிழக அரசு பிறப்பித்த திடீர் உத்தரவு...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 30, 2021, 7:00 PM IST
Highlights

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குப் பிறகு கொரோனா காரணமாக கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படவே இல்லை. 
 

குடியரசு தினமான ஜனவரி 26, உழைப்பாளர் தினமான மே 1, சுதந்திர தினமான ஆகஸ்ட் 15, காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2 ஆகிய நான்கு நாட்களிலும் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறும். பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, வேறு ஒரு பொது இடத்திலோ கிராம சபை கூட்டம் நடைபெறும்.

சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் அளவிற்கு கிராம   சபை தீர்மானத்திற்கும் அதிகாரம் உண்டு. சம்பந்தப்பட்ட மக்கள் சந்தித்து வரும் எந்த பிரச்சனைகள் குறித்தும் கிராம சபை கூட்டங்களில் தீர்மான நிறைவேற்றலாம். அந்த தீர்மானம் நீதிமன்றங்களிலும், அரசு அலுவலகங்களிலும் ஏற்றுக்கொள்ளப்படும். கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குப் பிறகு கொரோனா காரணமாக கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படவே இல்லை. 

தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் 2வது அலை தமிழகத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் தினந்தோறும் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் புதிய  உச்சத்தை எட்டி வருகின்றன. தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு பல கடுமையான கட்டுப்பாடுகளையும் அரசு விதித்துள்ளது. 

இப்படிப்பட்ட இக்காட்டான சூழ்நிலையில் கிராம சபை கூட்டங்களை நடத்துவது பாதுகாப்பாக  இருக்காது என்பதால் அதனை ரத்து செய்வதாக தமிழக  அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக சென்னை தவிர பிற மாவட்டங்களில் நாளை கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 
 

click me!