இனிமே தான் கொரோனாவின் ஆட்டமே இருக்கு.. வரும் நாட்களில் சென்னையில் தொற்று அதிகரிக்க வாய்ப்பு...!

Published : Apr 30, 2021, 04:13 PM IST
இனிமே தான் கொரோனாவின் ஆட்டமே இருக்கு.. வரும் நாட்களில் சென்னையில் தொற்று அதிகரிக்க வாய்ப்பு...!

சுருக்கம்

வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு சென்னையில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னை மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்க  தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 1,000 படுக்கை வசதிகளை ஏற்படுத்தியுள்ளோம். 

சென்னை மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். 

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு சென்னையில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னை மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்க  தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 1,000 படுக்கை வசதிகளை ஏற்படுத்தியுள்ளோம். 

கொரோனா தொற்று ஏற்பட்டால் பதற்றமின்றி சுகாதார ஆய்வாளரை தொடர்பு கொள்ள வேண்டும். கடந்த வருடம் பாதிப்பு எண்ணிக்கையை விட இந்த ஆண்டு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 33,500 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 சதவீத மக்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. 65 முதல் 70 சதவீதம் வரை வீட்டுத் தனிமைப்படுத்தலில் உள்ளனர். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தொடர்ந்து மாஸ்க் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

உயிரிழப்புகளை  முற்றிலும் தடுப்பதற்காக அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் 18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை நாளை செயல்படுத்த முடியாது. தேவையான தடுப்பூசிகள் இன்னும் வரவில்லை என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

புல் போதையில் வீட்டிற்கு வந்த கணவர்.. தனி அறையில் தூங்கிய மனைவியை விடாத சத்யராஜ்.. திடீரென அலறல்.. நடந்தது என்ன?
சென்னையில் அதிர்ச்சி.. காதல் திருமணம் செய்த 9 நாட்களில் மனைவி கொ*லை.. கணவர் விபரீத முடிவு.. நடந்தது என்ன?