அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு வர உத்தரவு.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி..!

By vinoth kumarFirst Published Jun 15, 2021, 12:10 PM IST
Highlights

கொரோனா தொற்று குறைந்த பிறகு 11 மாவட்டங்களில் மாணவ்கள் சேர்க்கை நடைபெறும். ஆசிரியர்கள் பள்ளிகளுக்க வருவதற்கான போக்குவரத்து வசதிகளை அந்தந்த ஆட்சித் தலைவர்களிடம் கோரி நடைமுறைப்படுத்த வேண்டும். 

அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழகம் முழுதும் புதிய கல்வி ஆண்டுக்கான பணிகள் நேற்று தொடங்கியது. பிளஸ் 1 வரையில், அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடத்த பள்ளி கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆகையால், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கியுள்ளது. அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களும், அலுவலக பணியாளர்களும் தினமும் பணிக்கு வர வேண்டும் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், பள்ளி கல்வி இயக்குநர் நந்தகுமார் பள்ளிகளுக்கு சுற்றிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அனைத்து வகுப்புக்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்பட வேண்டும். பள்ளிகளில் பல்வேறு பணிகள் நடைபெற இருப்பதால் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும். 27 மாவட்டங்களில் தலைமை ஆசிரியர்களுடன் பிற ஆசிரியர்களும் பள்ளிகளுக்கு சுழற்சி முறையில் வர வேண்டும்.

கொரோனா தொற்று குறைந்த பிறகு 11 மாவட்டங்களில் மாணவ்கள் சேர்க்கை நடைபெறும். ஆசிரியர்கள் பள்ளிகளுக்க வருவதற்கான போக்குவரத்து வசதிகளை அந்தந்த ஆட்சித் தலைவர்களிடம் கோரி நடைமுறைப்படுத்த வேண்டும். மாணவர்கள் சேர்க்கை விவரம் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

click me!