சிவசங்கர் பாபாவை ரவுண்டு கட்டும் போலீஸ்.. அலேக்கா தூக்கி வர டேராடூன் விரைந்தது சிபிசிஐடி..!

Published : Jun 15, 2021, 10:50 AM IST
சிவசங்கர் பாபாவை ரவுண்டு கட்டும் போலீஸ்..  அலேக்கா தூக்கி வர டேராடூன் விரைந்தது சிபிசிஐடி..!

சுருக்கம்

பாலியல் புகார் குறித்து சிவசங்கர் பாபாவிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி தனிப்படை டேராடூன் விரைந்தது. மேலும்,  சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களிலும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர், ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக  அந்த பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளங்களில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்தனர். மேலும், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் சிலர் புகார் அளித்ததாகவும் தெரிகிறது.

இதுதொடர்பான வழக்கில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், போக்சோ உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் சிவசங்கர் பாபா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு நேற்று சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.  

இந்நிலையில் சிவசங்கர் பாபா நெஞ்சுவலி காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சான்றுகளை, புகைப்படங்களை அவரது தரப்பினர் சமர்ப்பித்திருந்தனர். இதையடுத்து சிவசங்கர் பாபாவை நேரடியாக விசாரிக்க சிபிசிஐடி குழு டேராடூன் விரைந்தது.மேலும், சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

அதிகாலையில் அலறிய சென்னை! சினிமாவை மிஞ்சிய பயங்கரம்.! கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரவுடி கொ**லை
ரூ.18,500 முதல் 58,600 வரை சம்பளம்.. விண்ணப்பிப்பது எப்படி? சென்னை தியாகராஜர் கோவிலில் வேலை!