அரசு மருத்துவமனையில் அலட்சியம்... தாய், சேய் உயிரிழந்த பரிதாபம்...!

By vinoth kumarFirst Published Mar 5, 2019, 5:26 PM IST
Highlights

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் அலட்சியம் மற்றும் தவறான சிகிச்சையின் காரணமாக தாயும், சேயும் உயிரிழதனர். இதனால் கடும் ஆத்திரமடைந்த உறவினர்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் அலட்சியம் மற்றும் தவறான சிகிச்சையின் காரணமாக தாயும், சேயும் உயிரிழதனர். இதனால் கடும் ஆத்திரமடைந்த உறவினர்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் நெடுமரத்தைச் சேர்ந்தவர் கோபிநாத். இவருக்கும் செய்யூர் அடுத்த நெடுமரத்தை சேர்ந்த அகஸ்தியா என்ற பெண்ணிற்கும் கடந்த 1 வருடத்திற்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில் தலை பிரசவத்திற்காக அகஸ்தியா செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கடந்த 27-ம் தேதி சேர்க்கப்பட்டார். மேலும் அவரை பரிசோதித்த டாக்டர்கள், 1-ம் தேதி குழந்தை பிறக்கும் என்று தெரிவித்தனர். ஆனால், 1ம் தேதி ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில், 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு அகஸ்தியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

 

அவர் வலியால் துடித்துள்ளார். உறவினர்கள் அவர் துடிப்பதை பார்த்து பணியில் இருந்த செவிலியிடம் தெரிவித்துள்ளனர். உடனே, பணியில் இருந்த பயிற்சி செவிலியர், எனக்கு சிகிச்சை அளிக்க தெரியாது. டாக்டர்கள் விடுமுறை என கூறியுள்ளார். இதனால் அன்று இரவு முழுவதும் விடிய விடிய வலியால் துடித்துள்ளார் அகஸ்தியா. 

மறுநாள் அறுகை சிகிச்சை செய்த போது குழுந்தை இறந்து பிறந்ததாக மருத்தவர்கள் கூறியுள்ளனர். கொடி சுற்றி இருந்ததால் மூச்சுத்திணறி குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறி அகஸ்டியாவின் கருப்பையையும் அவர்கள் அகற்றியதாகக் கூறினர். இந்நிலையில் அகஸ்டியா உயிரிழந்து விட்டதாக நள்ளிரவு ஒரு மணி அளவில் தெரிவிக்கப்பட்டதாக உறவினர்கள் கூறியுள்ளனர். அகஸ்டியா ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகவும் இதை மறைத்து சிகிச்சை அளிப்பது போல் நடித்து தங்களை ஏமாற்றி விட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். 

அகஸ்டியாவின் உடலை வாங்க மறுத்துள்ள உறவினர்கள், திடீரென வருவாய் கோட்டாசியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர். 

click me!