நல்ல செய்தி மிக விரைவில் கிடைக்கும்... ஆறுதல் கொடுக்கும் கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்..!

Published : May 07, 2020, 12:29 PM IST
நல்ல செய்தி மிக விரைவில் கிடைக்கும்... ஆறுதல் கொடுக்கும் கொரோனா சிறப்பு அதிகாரி  ராதாகிருஷ்ணன்..!

சுருக்கம்

கொரோனாவால் இறப்பவர்களின் விகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மிகக்குறைவாக உள்ளது என சிறப்பு அதிகாரி  ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் இறப்பவர்களின் விகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மிகக்குறைவாக உள்ளது என சிறப்பு அதிகாரி  ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் சிறப்பு அதிகாரி  ராதாகிருஷ்ணன் பேட்டியளிக்கையில் கொரோனா தடுப்பு களப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மருத்துவமனைகளில் உள்ள பெரும்பாலானோர் நலமாக உள்ளனர். நல்ல செய்தி மிக விரைவில் கிடைக்கும். தேவையற்ற அச்சம் வேண்டாம். முதியவர்கள், சர்க்கரை நோயாளிகளை தனிக்கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும். சளி காய்ச்சல் இருந்தால் அரசு மருத்துவமனைக்கு வரவேண்டும் என்று ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மருந்து, மாத்திரைகள் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கட்டுப்படுத்த பகுதிகளில் மொபைல் ஏடிஎம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கை, கழுவிதல், முகக்கவசம் அணிவது போன்ற வாழ்வு முறைகளை மாற்றிக் கொள்ளவேண்டும். மேலும், தமிழக அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இறப்பு விகிதம் மிகக்குறைவாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

சென்னையில் 7 மண்டலங்களில் மட்டும் தான் பாதிப்பு அதிகம் உள்ளது. அதனால் சென்னையில் கொரோனா தடுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.மருத்துவமைனையில் சிகிச்சை பெறுவோரை பார்க்க உறவினர்கள் செல்ல வேண்டாம் என ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

Chennai Metro Train: சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.! பூந்தமல்லி–போரூர் பாதையில் 6 நிமிடங்களுக்கு ஒரு ரயில்! சீறிப்பாயும் சென்னை மெட்ரோ.!
போட்டு தாக்கிய குளிரால் அலறிய பொதுமக்கள்! மீண்டும் சென்னையில் ஆட்டத்தை ஆரம்பித்த மழை