இது வெட்கப்பட வேண்டிய விஷயம் அல்ல.. உடலில் மாற்றம் ஏற்பட்டால் உடனே பரிசோதனை செய்யுங்கள்.. சென்னை ஆணையர்..!

By vinoth kumarFirst Published Apr 10, 2021, 11:52 AM IST
Highlights

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் வீடுதேடி வரும் மாநகராட்சி ஊழியர்களிடம் தயக்கமின்றி தெரியப்படுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். 

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் வீடுதேடி வரும் மாநகராட்சி ஊழியர்களிடம் தயக்கமின்றி தெரியப்படுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். 

இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்;- கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் வீடுதேடி வரும் மாநகராட்சி ஊழியர்களிடம் தயக்கமின்றி தெரியப்படுத்த வேண்டும். மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை.

மேலும் அறிகுறிகள் இருப்பவர்கள் ஆரம்ப சுகாதார நிலையம், முகாம்களில் பரிசோதனை செய்துகொள்ளலாம். வீடு வீடாக சென்று உடல் வெப்பநிலை உள்ளிட்ட அறிகுறிகள் குறித்து நேரடி ஆய்வு நடத்தப்படும். இன்று முதல் கண்காணிப்பு குழுக்கள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்யும். வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தும் பணியில் 6 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கொரோனா பரவளின் தாக்கத்தை பொறுத்து பணியாளர்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

ஒருவர் தலா 250 வீடுகள் வீதம் ஆய்வு மேற்கொள்வர். 3 மாதங்களில் சென்னையில் 1.15 லட்சம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. தெரு வாரியாக எத்தனை பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. மேலும், அறிகுறிகளை கண்டறிந்து சிகிச்சை பெற்றால் கொரோனா உயிரிழப்புகளை குறைக்க முடியும்.

இனிவரும் காலங்களில் தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்துவது அவசியம். 2வது தவணை தடுப்பூசி செலுத்தினால் தான் 100% பலனை அடைய முடியும். 45 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

click me!