மக்களே இன்று வெளியே வராதீங்க... தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு..!

By Asianet TamilFirst Published Jul 5, 2020, 8:45 AM IST
Highlights

அத்தியாவசிய தேவைகளான பாலகங்கள், மருந்தகங்கள் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காய்கறி, மளிகைக் கடைகள், உணவகங்கள் உட்பட பிற அத்தியாவசிய சேவைகளும் இன்று செயல்படாது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மக்கள் வீடுகளை விட்டு தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

தமிழகத்தில் சென்னை மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நோக்கில் சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்கனவே முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தத் தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு கடந்த இரு வாரங்களாக 5 மாவட்டங்களில் கடைபிடிக்கப்பட்டுவருகின்றன.
ஆனால், பிற மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்துவருகின்றன. ஏற்கனவே தளர்வுகளுடன் கூடிய ஊரங்கு ஜூலை 31 வரை தமிழகத்தில் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதன்படி தமிழகம் முழுவதும் இன்று முழுமையாக ஊரடங்கு பின்பற்றப்படுகிறது. நள்ளிரவு 12 மணி வரை இந்த முழு ஊரடங்கு நீடிக்கும்.

click me!