தமிழ்நாட்டில் இன்று 4280 பேருக்கு தொற்று உறுதி..! 2214 பேர் டிஸ்சார்ஜ்.. 65 பேர் உயிரிழப்பு

Published : Jul 04, 2020, 06:34 PM IST
தமிழ்நாட்டில் இன்று 4280 பேருக்கு தொற்று உறுதி..! 2214 பேர் டிஸ்சார்ஜ்.. 65 பேர் உயிரிழப்பு

சுருக்கம்

தமிழ்நாட்டில் இன்று மேலும் 4280 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 107001ஆக அதிகரித்துள்ளது.   

தமிழ்நாட்டில் இன்று மேலும் 4280 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 107001ஆக அதிகரித்துள்ளது. 
 
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த, தமிழக அரசு கொரோனா பரிசோதனைகளை முடுக்கிவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 36164 பரிசோதனைகள் செய்யப்பட்டதில், 4280 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதனால் தமிழ்நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 107001ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1842 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 66538ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்துவருவது ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக அமைந்துள்ளது. இன்று ஒரே நாளில் 2214 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 60592ஆக அதிகரித்துள்ளது. 44956 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

தமிழ்நாட்டில் இன்று 65 பேர் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 1450ஆக அதிகரித்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!