பிரிட்ஜ் வெடித்து தனியார் டிவி நிருபர் குடும்பத்துடன் பலி.. - தாம்பரத்தில் பரபரப்பு சம்பவம்

By Asianet Tamil  |  First Published Jun 27, 2019, 12:36 PM IST

பிரிட்ஜ் வெடித்து, கரும்பு புகை வெளியானதால், தனியார் டிவி நிருபர், மனைவி, தாய் ஆகியோர் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தனர். இச்சம்பவம் தாம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


பிரிட்ஜ் வெடித்து, கரும்பு புகை வெளியானதால், தனியார் டிவி நிருபர், மனைவி, தாய் ஆகியோர் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தனர். இச்சம்பவம் தாம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை அடுத்த மேற்கு தாம்பரம் திருமங்கை மன்னன் தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பிரசன்னா (35). தனியார் தொலைக்காட்சியில் நிருபராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அர்ச்சனா (32). இவர்களுடன் பிரசன்னாவின் தாய் ரேவதி (59) வசித்து வந்தார்.

Latest Videos

இந்நிலையில், நேற்று இரவு பிரசன்னா வேலை முடிந்து வீடு திரும்பினார். அனைவரும் சாப்பிட்டு முடித்து அவர்களது அறையில் தூங்கினர். ஏசி போடுவதால், அனைத்து கதவுகள், ஜன்னல்களை மூடிவிட்டனர். நிள்ளிரவில் மின் அழுத்தம் காரணமாக திடீரென வீட்டில் இருந்த பிரிட்ஜ் வெடித்தது.

இதனால் கரும்புகை வெளியேறி, வீடு முழுவதும் பரவியது. இதையொட்டி மூச்சு திணறல் ஏற்பட்டு, அனைவரும் எழுந்து வெளியே வந்தனர். ஆனால், புகை மூட்டத்தால், அவர்களால் வெளியே வரமுடியவில்லை. இதில் 3 பேருக்கும் மூச்சு திணறல் அதிகரித்து, சம்பவ இடத்திலேயே இறந்தனர்.‘

இதைதொடர்ந்து இவர்களது வீட்டில் வேலை செய்யும் துர்கா என்ற பெண், இன்று காலை 9 மணிக்கு வந்தார். கதவு மூடி இருந்தது. நீண்ட நேரம் தட்டியும் திறக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவர், ஜன்னல் வழியாக பார்த்தபோது, வீடு முழுவதும் கரும்புகை சூழ்ந்து இருந்தது.

உடனே, அக்கம் பக்கத்தினர் உதவியுடன், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பிரசன்னா உள்பட 3 பேரும் சடலமாக கிடந்தனர்.

தகவலறிந்து சேலையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

click me!