ஆசை, கனவு, லட்சியம் எல்லாம் மண்ணோடு மண்ணா போச்சு.. டாக்டர்கள் அலட்சியத்தால் கால்பந்து வீராங்கனை பிரியா பலி.!

By vinoth kumar  |  First Published Nov 15, 2022, 8:06 AM IST

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவிக்குமார் மகள் பிரியா (17). ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த பிரியா, சென்னை ராணிமேரி கல்லூரியில் பட்டப் படிப்பு படித்து வருகிறார். 


கால் ஜவ்வு பிரச்சனை காரணமாக, அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட கால்பந்து வீராங்கனை பிரியா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவிக்குமார் மகள் பிரியா (17). சிறுவயது முதலே முதலே கால்பந்தாட்டத்தில்  அதிக ஈடுபாடு கொண்டவர். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த பிரியா, சென்னை ராணிமேரி கல்லூரியில் பட்டப் படிப்பு படித்து வருகிறார். கால்பந்து விளையாட்டில் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றுளளார்.

Latest Videos

undefined

இதையும் படிங்க;- கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

இந்நிலையில், சமீபத்தில் கால்பந்து பயிற்சியின் போது பிரியாவின் வலது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. தீராத வலி காரணமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது பிரியாவின் காலில் ஜவ்வு விலகி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, பெரம்பூர் பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் கடந்தத 7ம் தேதி ஆபரேசன் செய்யப்பட்டது.  ஆபரேசன் செய்த பிறகும் வலி குறையவில்லை. கால் பெரிய அளவில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மேல்சிகிச்சைக்காக பிரியா ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். 

அவரை பரிசோதனை செய்த போது அவரது வலது காலில் ரத்த ஓட்டம் தடைபட்டிருப்பது தெரியவந்தது. மருத்துவர்கள் காலில் தசைகள் அனைத்தும் அழுகக்கூடிய நிலையில் இருப்பதால் காலை அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, தனது மகள் உயிர் தான் முக்கிய என்று எண்ணிய பெற்றோர் கால்பந்து வீராங்கனையின் கால்களை அகற்ற சம்மதித்துள்ளனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் இரத்த நாள சிகிச்சை நிபுணர், எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை மருத்துவக்குழு தீவிரமாக கண்காணித்து வந்தனர். 

இந்நிலையில்,  கால்பந்து வீராங்கனை பிரியா அவரது உடல்நிலை மோசமடைந்தது சிறுநீரகம், ஈரல் மற்றும் இதயம் பாதிக்கப்பட்டதை அடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கால் ஜவ்வு பிரச்சனைக்காக சென்ற கால்பந்து வீராங்கணை மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தவறான சிகிச்சை மேற்கொண்ட எலும்பியல் துறையைச் சேர்ந்த 2 மருத்துவர்கள் ஏற்கனவே பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்;- ''மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாக பிரியா உயிரிழந்து இருக்கிறார். துறை ரீதியான நடவடிக்கை இரண்டு மருத்துவர்களின் மீது எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க;- மீண்டும் மிரட்டப்போகிறதா கனமழை? எந்த பகுதி தெரியுமா? தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்..!

click me!