வீடுகள் கட்ட மீனவர்களுக்கு நிதியுதவி கிடையாது… - மத்திய அமைச்சர் அதிர்ச்சி தகவல்

By Asianet TamilFirst Published Jul 17, 2019, 11:17 AM IST
Highlights

மீனவர்கள் வீடு கட்டுவதற்காக கூடுதல் நிதியுதவி வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் வீடு கட்டுவதற்காக கூடுதல் நிதியுதவி வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், மீனவர்கள் வீடு கட்டுவதற்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. மாநிலங்களில் நபருக்கு தலா ரூ.1.2 லட்சமும், இமாச்சலப் பிரதேசம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ரூ.1.3 லட்சமும் வழங்கப்படுகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் மீனவர்களுக்கு 18,920 வீடுகள் கட்டுவதற்காக மத்திய அரசின் நிதியாக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.104.69 கோடி வழங்கப்பட்டுள்ளது. மீனவர்கள் வீடு கட்டுவதற்கு கூடுதல் நிதியுதவி வழங்கும், புதிய திட்டத்துக்கான எந்த முன்மொழிவும் இல்லை.

மீனவர்கள் வீடு கட்டுவதற்கு வழங்கப்பட்டு வரும் நிதியை அதிகரிக்க வேண்டும் என மாநில அரசுகளிடம் இருந்தும் கோரிக்கையும் பெறவில்லை. எனவே, மீனவர்களுக்கு கூடுதல் நிதி வழங்கும் புதிய திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்றார்.

click me!