
சென்னை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கே.கே நகரில் ஆர்.டி.ஓ அலுவலகம் உள்ளது. இங்கு ஆய்வுக்காக பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்று இரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேருந்துகள், ஒரு லாரி, ஒரு வேன், இரண்டு ஆட்டோக்கள் முற்றிலும் தீயில் எரிந்து சேதமாகின. தகவல் அறிந்த வந்த தீயணைப்பு துறையினர், மேலும் தீ பரவாமல் இருக்க தீயை அணைத்தனர்.
இதையும் படிங்க..iPhone 11 வெறும் ரூ.8,950க்கு கிடைக்கிறது! இதை விட்டா வேற சான்ஸ் கிடைக்காது - முழு விபரம் !!
விபத்து நடந்த இடத்திற்கு உடனே வந்த நான்கு தீயணைப்பு வானங்கள், 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 20 நிமிடங்கள் போராடிய தீயை அணைத்தனர். தீ விபத்து எப்படி ஏற்பட்டது என தீயணைப்பு துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், தீ விபத்திற்கான காரணம் குறித்து எம்ஜிஆர் நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க..ஏர் கூலர் + அரை நாள் போராட்டம்.. ஜெயலலிதா சர்ச்சை முடிவதற்குள் கருணாநிதியை வம்புக்கு இழுத்த அண்ணாமலை